பால் கொழுக்கட்டை

தேதி: October 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு போட்டு நன்கு கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கரண்டி காம்பால் கலந்து கொள்ளவும். 5 நிமிடம் மூடி தனியே வைக்கவும்.
தேவையான அளவு வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சவும். அதனுடன் ஏலக்காய் பொடித்து சேர்க்கவும். பாகை வடிகட்டி வைக்கவும்.
கொதித்த நீரை விட்டவுடன் மாவே வெந்தது போல் இருக்கும். அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை அரை விரல் அளவு உருட்டிக்கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் மாவையும், பேப்பரை விரித்து அதன்மேல் பரவலாக உருட்டி போடவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். உருட்டிய உருண்டைகளை கொதிக்கும் நீரில் போடவும். பிறகு அதன் மேல் வெல்லபாகையும் ஊற்றவும். உருண்டைகள் உடையாமல் கலந்து விடவும்.
வெந்த உருண்டைகள் மேலே மிதக்கும். வெல்லக் கரைசல் சிறிது கெட்டியானவுடன் அடுப்பை நிறுத்தவும்.
சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு தயாரிக்கும் முறை:
பச்சரிசியை தண்ணீரில் 1 /4 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை வடித்து எடுத்து சுத்தமான வெள்ளை துணியில் நிழலில் உலர்த்தவும். அரிசியில் சிறிது ஈரம் இருக்கும் போதே மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சல்லடையில் நன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை ஒரு துணியில் மூட்டையாக கட்டி இட்லிக்கு வேக வைப்பது போல் வேக வைத்து எடுத்தால் அரிசி மாவு தயார். இந்த மாவை புட்டு, இடியாப்பம் செய்யவும், 6 மாதம் வரை உபயோகப்படுத்தலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா....அரிசி மாவு இவ்லோ சுலபமா செய்யாலாமா....நீங்க சொன்ன அப்பறம் தான் தெரியும்.........ரொம்ப நன்றி

ரம்யா பால் கொழுக்கட்டை நானும் இந்த முறையில் தான் செய்வேன்.
அனால் தண்ணீருக்கு பதிலாக பசுப்பாலில் அல்லது தேங்காய் பாலை கொதிக்க வைத்து செய்வேன்.

உங்கள் முறையும் நல்லாய் தான் இருக்கும், செய்து பார்க்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்னது உறவைத்து அரைத்து ஆவியில் வேக வைத்த மாவை 6 மாதம் வரை பயன்படுதலாமா? சொல்லுங்க pa pls,,,,செல்வமீனா எங்க போனீங்க?????

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ஹாய் ரம்யா பால்கொழுக்கட்டை ரெசிப்பி பார்க்கவெ நல்லாயிருக்கு.எங்க ஊர்ல இதெமுறையில் தேங்காய்பாலில்(நீருக்குபதில்)சீனி செர்த்து செய்வார்கள்.அடுத்த தடவை உங்க முரையில் செய்துபார்த்து பதிவு பண்றென்.

ரம்யா,
உங்க பால் கொழுக்கட்டை ரெஸிப்பி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு, செய்முறையும் ஈஸியாதான் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிற்று!. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி! இடியாப்ப மாவும் இருக்கு. இந்த வீக்வென்ட் செய்திட வேண்டியதுதான்!

தேங்காய் பாலில் செய்வதாக குறிப்பிட்ட தோழிகளுக்கு: எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
பசும்பாலில் வேக விட்டால் ஓகே. தேங்காய் பால் அதிக நேரம் கொதிக்கவிட்டு அரிசி உருண்டைகளை வேகவிட்டால், ரொம்ப கொதித்த தேங்காய் பால் திரிதிரியாக போய் விடுமா? இல்லை, ஒன்றும் ஆகாதா? கொஞ்சம் தெரிஞ்சவங்க விளக்குங்களேன், ப்ளீஸ். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இது போலதான் எங்க அம்மா செய்வாங்க,நெய்யில் பட்டை, ஏலக்காய்,சிறிது சோம்பு தே,துருவல் முந்திரி தாளித்து சேர்ப்பாங்க,நல்லா வாசமாக இருக்கும்.
மாவை உருட்ட கஷ்டமா இருந்தால் முறுக்கு உரலில் நீளமாக பிழிந்து விடலாம்.ஈசியா இருக்கும்.
தே,பால் முதல் பால் தான் ரொம்ப நேரம் கொதிக்க கூடாது,இதில் இரண்டாம் பாலில் தான் முதலில் வேக வைப்பாங்க.

சின்ன பிள்ளைல நாங்களும் இப்படி உருட்டி கொடுப்போம். அம்மா பால் கொழுக்கட்டைன்னு பண்ணி கொடுப்பாங்க. உங்க குறிப்பு வித்தியாசமான கலரில் இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க பால் கொழுக்கட்டை ரெஸிப்பி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு, செய்முறையும் ஈஸியாதான் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிக்கும்.சாப்பிட்டு பல நாட்கள் ஆகிற்று!. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி!

No pain No gain

ரம்யா,
பால் கொழுக்கட்டை,எப்போதோ சாப்பிட்டு இருக்கேன்.அதன் பெயர் கூட,அப்போ தெரியாது.உங்க குறிப்பு பார்த்த பிறகு தான் செய்முறை தெரிந்தது.மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

ராம்யாரமேஷ்

அப்பாபா..... ரொம்ப நால் ஆச்சுப்பா பால்கொழுக்கட்டை சாப்பிட்டு ஆசைய தூண்டிட்டீங்க கண்டிப்பா செய்து பார்கிறேன் எங்கம்மாவும் இப்படித்தான் செய்வாங்க என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தருகிறேன்.

வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு என் நன்றி.

பின்னூட்டம் அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. செய்துபாருங்கள். யோகராணி பாலும், தேங்காய் பாலும் விட்டும் செய்யலாம். அது ஒரு முறை இது ஒரு முறை, இதை 2 நாட்கள் FRIDGE ல்வைத்தும் சாப்பிடலாம்.

விமலாகீதா இந்த வகை அரிசி மாவை 6 மாதம் வரை வைத்து உபயோகபடுத்தலாம் கொழுகட்டைக்கு மேல் மாவாக,புட்டு, இடியாப்பம் செய்யலாம். செய்துபாருங்கள்.

ரம்யா.. நாங்களும் இப்படித்தான்பா பண்ணுவோம். ஆனாலும் உங்ககுறிப்பு பாக்கவே ரொம்ப அழகா இருக்கு. என் அம்மா பாலில் வேக வைத்து கடைசியாக துருவிய தேங்காய் சேர்ப்பார்கள். நல்ல ஆரோக்கியமான ரெசிப்பி. வெல்லம் சேர்த்து செய்தது கிடையாது. கண்டிப்பா செய்து பாக்கிறேன். இந்த வாரம் மாவும் இருக்கிறது. ஈவ்னிங் பண்ணிட வேண்டியது தான்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ramya palkolkatai endral enaku romba pidikum enga amma seidhu kodupargal ungalal thirumbavum athai seiya pogiren thanks ramya