நூதன கத்தரிக்காய் கறி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய ஊதா வண்ணக் கத்தரிக்காய் - அரைக் கிலோ
எள் - கால் கப்
புதினா - அரை கட்டு
கொத்தமல்லி - அரை கட்டு
வெங்காயம் - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கெட்டிப் புளி கரைசல் - ஒரு மேசைக்கரண்டி
வெல்லம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் அலசி நறுக்கின புதினாவையும், மல்லித்தழையையும் போட்டு நன்கு நீர் சுண்ட வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெறும் வாணலியில் எள்ளை போட்டு வெடிக்க விடவும்.
பிறகு எள்ளுடன் வதக்கின தழைகள், மிளகாய் பொடி, புளி விழுது, வெல்லம், உப்பு முதலியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கத்தரிக்காயை நான்காக வகுந்து இந்த விழுதை நிரப்பி, அடைக்கவும்.
ஒரு தட்டில் இவற்றை பரவலாக அடுக்கி, ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
மைக்ரோவேவ் அவன் என்றால், ஸ்டீமரில் ஹையில் 8 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு எடுத்து நன்றாக ஆறவிட்டு, ஒரு நான்-ஸ்டிக் ப்ரை பானில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் போட்டு வதக்கவும்.
குறைந்த தீயில் வதக்கவும். ஏற்கனவே வெந்திருப்பதால் சீக்கிரம் வதங்கி விடும்.
இதனை வெங்காயம் இல்லாமலும் செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் சித்ரா மேடம், நீங்க தான் சித்விஷ் ஆ? உங்க குறிப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது.மென்மேலும் உங்க குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.