மலர் அலங்காரம் - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை


மலர் அலங்காரம்

வெள்ளி, 08/10/2010 - 16:40
Difficulty level : Easy
3.923075
13 votes
Your rating: None

 

  • வெட் ஒயாசிஸ்
  • க்ளிங் ராப்
  • ரிப்பன் – ஒவ்வொன்றுக்கும் குறைந்தது ஒன்றேகால் மீட்டர்
  • ப்ளோரல் பேப்பர்கள்
  • பூக்களும், வேறுபட்ட வடிவங்கள் கொண்ட இலைகளும்
  • கத்தி
  • கத்தரிக்கோல்
  • பல்லுக் கத்தரிக்கோல்
  • ஸ்னிப்பர்

 

மலர் அலங்காரம் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒயாசிஸை சரிப்பாதியாக வெட்டவும்.

தேவையான நீளத்துக்கு க்ளிங் ராப்பை வெட்டி எடுத்துக் கொண்டு ஒரு பாதி ஒயாசிஸினை, அதன் நடுவே வைத்து படத்தில் காட்டி இருப்பது போல் சுற்றி வைக்கவும்.

ஓயாசிஸின் மீது க்ளிங் ராப்பை இதுபோல் சுற்றி வைக்கவும்.

ப்ளோரல் பேப்பரை அரை மீட்டர் அளவான சதுரங்களாக வெட்டவும். பல்லுக் கத்தரிக்கோல் கொண்டு வெட்டினால் அழகாக இருக்கும்.

அதன் நடுவே க்ளிங் ராப் சுற்றி வைத்து இருக்கும் ஒயாசிஸை வைத்து மேல் ஓரத்தில் ரிப்பனால் சுற்றிக் கட்டி போ வைத்து விடவும். (இதில் 2 செ.மீ அகலமான ரிப்பன் பயன்படுத்தி உள்ளார். அகலமானது என்றால் நீளம் அதிகம் தேவைப்படும்.) ரிப்பன் ஓரங்களைச் சரிவாக அல்லது V வடிவத்தில் வெட்டிவிடவும். க்ளிங் ராப்புக்கு வெளியே வராதவாறு பொறுமையாக ஓயாசிஸில் நீர் விடவும். நிறைய நீர் பிடிக்கும் என்பதால் பார்த்துப் பார்த்துக் பேப்பர் நனையாதவாறு மெதுவாக விடவும்.

ப்ளோரல் பேப்பரை அழகாக விரித்து விட்டு, பூக்களையும் இலைகளையும் பொருத்தமான வடிவத்தில் சொருகி அழகுபடுத்தவும். காயமடைந்த இலைகளையும் இதழ்களையும் நீக்கி விடவும். நீக்கும் போது அவற்றைக் கையால் உடைக்காமல் ஸ்னிப்பர் கொண்டு வெட்டி விட்டால் சீராக இருக்கும்.

மென்மையான தண்டு கொண்ட பூக்கள் இலைகள் வைக்கும் போது, ஒரு குச்சியால் ஒயாசிஸில் தேவையான இடத்தில் அடையாளம் செய்து கொண்டு பின்பு குத்தினால் தண்டு உடையாமல் உள்ளே இறங்கும். ஏனையவற்றுக்குக் குச்சிகளின் அடியில் ஸ்னிப்பரால் சரிவாக ஒரு வெட்டு வெட்டினால் சுலபமாக இறங்கும்.

நான்கைந்து பூக்கள் இருந்தால் கூடப் போதும், இப்படி ஒரு அழகிய பூச்செண்டை அமைத்து நண்பர்களுக்கு எடுத்துச் செல்லலாம். கொண்டு செல்லும் போது நீர் சிந்தாது. வைத்தியசாலையிலுள்ளவர்களுக்கு மலர்கள் எடுத்துச் செல்வதானால் இது போல பூச்செண்டு மற்றவைகளை விட வசதியாக இருக்கும். மலர்களை வைப்பதற்கு அவர்கள் சாடி தேட முடியாது அல்லவா?. அழகான, பயனுள்ள இந்த மலர் அலங்காரத்தை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

பிறகு தேவையைப் பொறுத்து வாடிவிடும் மலர்களை அகற்றி விட்டுப் புதிய மலர்களைச் சொருகிக் கொள்ளலாம். பயன்பாடு முடிந்ததும் ஒயாசிஸை உலரவைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டால் மீண்டும் தேவையான போது உபயோகப்படுத்தலாம். அப்படி வைப்பதானால் பூக்கள், இலைகள் எதுவானாலும் ஒயாசிஸில் அழுகி விடாமல் நேரத்துக்குப் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும்.


சூப்பர் செபா ஆன்டி! இது நல்ல

சூப்பர் செபா ஆன்டி! இது நல்ல ஐடியாவா இருக்கே.. யாருக்காவது பூச்செண்டு கொடுக்க நினைத்தால் அவங்ககிட்ட பிளவர்வேஸ் இருக்குமான்னு யோசிக்க தேவையில்லை ....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

seba aunty

செபா ஆன்டி உங்கள் புசெண்டுமிகவும் அழகாக உள்ள்து

மலர் அலங்காரம்

செபா ஆன்டி...உங்களுடன் பேசுவது இது தான் முதல் தடவை. மலர் அலங்காரம் ரொம்பவே அழகாக உள்ளது. பண்டிகைகள் தொடர்ந்து வர உள்ள சமயத்தில் நல்லதொரு பயனுள்ள கைவினையை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மலர் அலங்காரம்

செபா மேடம் உண்மையில் இது பயனுள்ள க்ராப்ட். ரொம்ப அழகான, ஈஸியான செய்முறையும் கூட. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.

அழகு மலர்ச்செண்டு!

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு செபாம்மா! ஈசியாவும் இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செபா அம்மா,

செபா அம்மா,
மலர் அலங்காரம் ரொம்ப நல்லா இருக்கு.கடையில் கிடைப்பது போன்றே ரொம்ப அழகா,நேர்த்தியா செய்து இருக்கீங்க.மலர்கள் மற்றும் ப்ளோரல் பேப்பரின் கலர் காம்பினேஷன் ரொம்ப அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்.

வினோஜா

வினோஜா,
;)) இப்ப கேட்கணும் என்று எனக்கே தோணுது.
//செபா மேடம் உண்மையில் இது பயனுள்ள க்ராப்ட்.// என்றால் என்ன அர்த்தம்!! என்ன அர்த்தம்ம்ம்ம்ம்!!!!!! சொல்லுங்கோ!!!!! ;)))

‍- இமா க்றிஸ்

இமா

இமா மேடம் கடைகளில் இந்த மாதிரி மலர் அலங்காரத்துக்கு தனியா சின்ன பூக்கூடைல அலங்காரம் பண்ணி வைப்பாங்க. கூடைன்னா தூசி படிஞ்சுட்டா கழுவ கஷ்டமா இருக்கும். இது அப்படியில்லையே ஒயாசிஸை சுத்தி க்ளிங் ராப் சுத்தி இருக்கு ப்ளோரல் பேப்பரில் தூசி இருந்தாலும் ஈசியா துடைச்சுக்கலாம். ஒயாசிஸ்ல தண்ணி ஊற்றி வைச்சு இருக்கோம். தண்ணி மாற்ற அவசியமில்லை. பூக்களும் விழுவதற்கும் வாய்ப்பில்லை. வேஸ் வைக்கறதா இருந்தா பூ நிறையா வைக்கனும் பூ, காம்பு எல்லாம் தளர்ந்து போனா ஒரு அழகு இல்லாதது போல் இருக்கும். இந்த க்ராஃப்ட்ல நாலு பூ வைச்சாலும் சும்மா நச்சுனு இருக்குல. கடையில இந்த மாதிரி வாங்கிட்டு போறதுக்கு பதிலா நம்ம கையால ப்ரெண்ட்ஸ்க்கு, ரிலேட்டிவ்ஸ் கொடுக்கும் போது தனி சந்தோஷம். அதனால்தான் எனக்கு இது பயனுள்ள க்ராஃப்ட். போதுமா இமா மேடம். இந்த க்ராஃப்ட் செஞ்சு பார்த்துட்டு இன்னும் இதோட பயன் என்னனு சொல்றேன் சரியா.

இலா, arif, VrScorp வினோஜா, கவ

இலா,
arif,
VrScorp
வினோஜா,
கவிசிவா,
ஹர்ஷா,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அன்புடன் செபா.

வினோஜா, யாரேனும் நமக்கு உதவி

வினோஜா, யாரேனும் நமக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றியாகவும்
(thanks a bunch) கொடுக்கலாமே.