மலர் அலங்காரம் - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை - பக்கம் 2


மலர் அலங்காரம்

வெள்ளி, 08/10/2010 - 16:40
Difficulty level : Easy
3.923075
13 votes
Your rating: None

 

  • வெட் ஒயாசிஸ்
  • க்ளிங் ராப்
  • ரிப்பன் – ஒவ்வொன்றுக்கும் குறைந்தது ஒன்றேகால் மீட்டர்
  • ப்ளோரல் பேப்பர்கள்
  • பூக்களும், வேறுபட்ட வடிவங்கள் கொண்ட இலைகளும்
  • கத்தி
  • கத்தரிக்கோல்
  • பல்லுக் கத்தரிக்கோல்
  • ஸ்னிப்பர்

 

மலர் அலங்காரம் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒயாசிஸை சரிப்பாதியாக வெட்டவும்.

தேவையான நீளத்துக்கு க்ளிங் ராப்பை வெட்டி எடுத்துக் கொண்டு ஒரு பாதி ஒயாசிஸினை, அதன் நடுவே வைத்து படத்தில் காட்டி இருப்பது போல் சுற்றி வைக்கவும்.

ஓயாசிஸின் மீது க்ளிங் ராப்பை இதுபோல் சுற்றி வைக்கவும்.

ப்ளோரல் பேப்பரை அரை மீட்டர் அளவான சதுரங்களாக வெட்டவும். பல்லுக் கத்தரிக்கோல் கொண்டு வெட்டினால் அழகாக இருக்கும்.

அதன் நடுவே க்ளிங் ராப் சுற்றி வைத்து இருக்கும் ஒயாசிஸை வைத்து மேல் ஓரத்தில் ரிப்பனால் சுற்றிக் கட்டி போ வைத்து விடவும். (இதில் 2 செ.மீ அகலமான ரிப்பன் பயன்படுத்தி உள்ளார். அகலமானது என்றால் நீளம் அதிகம் தேவைப்படும்.) ரிப்பன் ஓரங்களைச் சரிவாக அல்லது V வடிவத்தில் வெட்டிவிடவும். க்ளிங் ராப்புக்கு வெளியே வராதவாறு பொறுமையாக ஓயாசிஸில் நீர் விடவும். நிறைய நீர் பிடிக்கும் என்பதால் பார்த்துப் பார்த்துக் பேப்பர் நனையாதவாறு மெதுவாக விடவும்.

ப்ளோரல் பேப்பரை அழகாக விரித்து விட்டு, பூக்களையும் இலைகளையும் பொருத்தமான வடிவத்தில் சொருகி அழகுபடுத்தவும். காயமடைந்த இலைகளையும் இதழ்களையும் நீக்கி விடவும். நீக்கும் போது அவற்றைக் கையால் உடைக்காமல் ஸ்னிப்பர் கொண்டு வெட்டி விட்டால் சீராக இருக்கும்.

மென்மையான தண்டு கொண்ட பூக்கள் இலைகள் வைக்கும் போது, ஒரு குச்சியால் ஒயாசிஸில் தேவையான இடத்தில் அடையாளம் செய்து கொண்டு பின்பு குத்தினால் தண்டு உடையாமல் உள்ளே இறங்கும். ஏனையவற்றுக்குக் குச்சிகளின் அடியில் ஸ்னிப்பரால் சரிவாக ஒரு வெட்டு வெட்டினால் சுலபமாக இறங்கும்.

நான்கைந்து பூக்கள் இருந்தால் கூடப் போதும், இப்படி ஒரு அழகிய பூச்செண்டை அமைத்து நண்பர்களுக்கு எடுத்துச் செல்லலாம். கொண்டு செல்லும் போது நீர் சிந்தாது. வைத்தியசாலையிலுள்ளவர்களுக்கு மலர்கள் எடுத்துச் செல்வதானால் இது போல பூச்செண்டு மற்றவைகளை விட வசதியாக இருக்கும். மலர்களை வைப்பதற்கு அவர்கள் சாடி தேட முடியாது அல்லவா?. அழகான, பயனுள்ள இந்த மலர் அலங்காரத்தை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

பிறகு தேவையைப் பொறுத்து வாடிவிடும் மலர்களை அகற்றி விட்டுப் புதிய மலர்களைச் சொருகிக் கொள்ளலாம். பயன்பாடு முடிந்ததும் ஒயாசிஸை உலரவைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டால் மீண்டும் தேவையான போது உபயோகப்படுத்தலாம். அப்படி வைப்பதானால் பூக்கள், இலைகள் எதுவானாலும் ஒயாசிஸில் அழுகி விடாமல் நேரத்துக்குப் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும்.


நன்றி

ம் எவ்ளோ எளிமையா
குறைந்த நேரத்தில
அழகான பூஜாடி
செய்து காண்பித்த தி கிரேட் செபா க்ராண்டமாவுக்கு நன்றி..

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

செபா அன்ட்டி

செபா அன்ட்டி... ரொம்ப அருமையா அழகா செய்திருக்கீங்க. சூப்பர், நான் இந்தியா போனதும் செய்து உங்களுக்கு படம் அனுப்பறேன். இங்க பூ விலை நினைச்சா பூ ஆசையே போயிடும் :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செபா மேடம் :)

செபா மேடம்,
உங்கள் மலர் அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது... நீங்கள் சொல்லி இருப்பதை படிக்கும் போது, ஈசியாகவும் இருக்கிறது...
கடைகளில் வாங்கும் பூச்செண்டு போலவே சூப்பராக இருக்கிறது :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)