சன்னாதால் ஸ்டப்டு சப்பாத்தி

தேதி: October 9, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கடலைபருப்பு- 50 கிராம்
கோதுமை மாவு- 1 கப்
நெய்- 1ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சீரகம்- 1/4 ஸ்பூன்
மிளகு- 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு- சிறிதளவு


 

கோதுமை மாவில் உப்பு, சோடா உப்பு, நெய், வெதுவெதுப்பான நீர் ஊற்றி பினைந்து 1/2 மணி நேரம் காற்றுபுகாத டப்பாவில் வைக்கவும்.

குக்கரில் மற்ற அனைத்துப் பொருட்களுடன் நீர் சேர்த்து 5 விசில் வரும் வரை அவிக்கவும்.

பின்னர் மூடி திறந்து நீர் வற்ற நன்கு கிளறி ஆற விடவும்.

அதன் பின் மிக்ஸியில் தேவைக்கு உப்பும் சேர்த்து அரைக்கவும். கலவை நன்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கடலைமாவு சேர்க்கலாம்.

பினைந்த மாவில் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.

அதன் நடுவில் கடலைப்பருப்பு கலவை சிறிதளவு வைத்து மூடி பின் மீண்டும் ஒரு முறை தேய்த்து சுட்டெடுக்கவும்.


பழக்கமில்லாதவர்கள் வட்டமாக 2 உருண்டை தேய்த்து ஒன்றின் மேல் கலவை வைத்து அதன் மேல் இன்னொரு தேய்த்த மாவினை வைத்து மூடிவிடவும். அதன் பின் ஓரங்களில் மட்டும் அழுத்திவிட்டு மேலாக லேசாக தேய்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல ஹெல்தியான ரெசிப்பி, செஞ்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன், மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

ஜெயா
நல்லா இருக்கும். செய்து பாருங்க. உ.பி வந்த புதிதில் இங்குள்ளவர்கள் செய்து கொடுத்தார்கள். அவ்வளவு ருசி. வித்தியாசமான சுவைல இருந்தது. தொட்டுக்க எதுவும் தேவையே இல்லை.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல ரெசிபி நாளையே செய்து பார்க்கிரேன்.

கண்டிப்பா செய்து பாருங்க சித்ரா. நல்லா இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சன்னதால் ஸ்டஃப்ட் சப்பாத்தி குறிப்பு நல்லா இருக்கு. நான் பூனா போனதும் செய்து பார்க்கிரேன்.

புதிய குறிப்புகளுடன் வந்து அசத்தும் நமது ஆமிக்கு எனது வாழ்த்துக்கள், சூப்பரான குறிப்பு கண்டிப்பாக செய்கிறேன், ஸ்டப் செய்து இதுவரை சப்பாத்தி செய்ததில்லை. குறிப்புக்கு வாழ்த்துக்கள் ஆமி.

அன்புடன்
நித்யா

சலாம் ஆமி வித்யாசமா இருக்கு நான் முட்டை, கொத்துக்கறியில் செய்துஇருக்கிறேன் செய்து பார்துட்டு சொல்றேன்

பாத்திமாம்மா

வஸ்ஸலாம். நானும் கொத்துகறியில் பண்ணுவேன். முட்டை சேர்த்ததில்லை. இம்முறையில் செய்து பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நித்யா

வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

செய்து பாருங்க நித்யா. நான் அடிக்கடி ஸ்டப்டு சப்பாத்தி தான் செய்வேன். அப்ப தான் செய்த அனைத்து காய்கறியும் வீணா போகாது. சாப்பிடுவாங்க.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோமு

கண்டிப்பா செய்து பாருங்க.

பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள் பல

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சன்னதால் ஸ்டஃப்ட் சப்பாத்தி குறிப்பு நல்லா இருக்கு.

idhuvum kadandhu pogum.

நன்றி வனிதாகோவிந்த ராஜு
மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா சன்னாதால் ஸ்டப்டு சப்பாத்தி பெயருடன் செய்கை முறையென எல்லாமே வித்தியாசமாக இருக்கே,

உங்கள் கைப்பக்குவம் எப்போதும் சுவையாகவே இருக்கு.செய்து பார்த்திட வேண்டியதுதான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மிக்க நன்றி யோகா

உடனே செய்து பார்த்துடுங்க. நல்லா இருக்கும்

கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
நலமா?
எளிமையா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா