வாங்கி பாத்

தேதி: October 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - ஒரு பிடி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கடலைப் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2


 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து, அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்ததும் புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும்.
பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
உதிரியாக வடித்து ஆற வைத்த சாதம் போட்டு கலந்தால் கத்தரிக்காய் சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு ஹர்ஷா

எல்லாமே வீட்டில் இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்கிறேன். மேலும் பல குறிப்புக்களை பகிர்ந்துக்கொள்ள வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாளை மதியம் லஞ்சுக்கு வாங்கி பாத்தான்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ஆமி and சித்ரா,
கண்டிப்பா நல்லா இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்கள் பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா, எங்க வீட்ல மீந்த சாப்பாட்டை எப்படி மேக்கப் பண்றதுன்னு டெய்லி ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பேன். உங்களோட கத்தரிக்காய் வாங்கிபாத் நல்ல டேஸ்டா இருக்கும்னு நினைக்கறேன். இனிமே சாப்பாடு மீந்தால் கவலை இல்லை. உங்களோட இந்த ரெசிப்பிய போட்டு அசத்திடுவேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பரசி.. ஒரு நாள் லன்ஞ்க்கு இது தான் பண்ண போறேன். இவருக்கு ஆபிஸ்க்கு பேக் பண்ணி கொடுக்க வசதியா இருக்கும். இப்ப கத்திரிக்காய் இல்ல. போய் வாங்கிட்டு வந்து தான் பண்ணனும். பாக்கவே சாப்பிடனும் போல இருக்கு. செய்துபார்த்துட்டு சொல்றேன். நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பரசி மிகவும் சுலபமான குறிப்பு வீட்டில் எல்லா பொருட்களும் உள்ளது கண்டிப்பா செய்து பார்க்கிறேன், என் நாத்தனாரும் இப்படித்தான் செய்வார்களாம், ஆனால் சாபிட்டதில்லை குறிப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

கல்ப்ஸ்,
புது சாதத்துல கூட பண்ணலாம்.தைரியமா பண்ணுங்க.நல்லா இருக்கும். உங்க பதிவுக்கு நன்றி.

ராதா,
நீங்க சொல்வது போல,லன்ச்சுக்கு கொடுக்கலாம்.இந்த ரெசிப்பி செய்து,என்னவருக்கு லன்ச்சுக்குதான் கொடுத்தேன்.உங்க பதிவுக்கு நன்றி.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

நித்யா,
இந்த சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.செய்வதும் ஈசி தான்.கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொலுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

அன்பரசி,
வாங்கிபாத் நல்லா இருக்கே
செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
நலமா?இந்த சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.