குழந்தைக்கு எழுத்தார்வம்

என் குழந்தைக்கு மூன்றரை வயது ஆகிறது.நர்சரி செல்கிறான்...

ஆனால் எழுத ஆர்வமே இல்லை....பென்சிலை பிடித்து எழுதுவதே இல்லை..

இவன் வயது பிற குழந்தைகள் நன்றாக எழுதுகிறார்கள்...

மூன்று வயதுவரை விரல்களுக்கு பலம் அதிகமிருக்காது என்பதால் உட்கார்ந்து

முறையாக எழுத வைக்கவில்லை..இப்போது பென்சிலே பிடிக்க மாட்டேங்கிறான்.

ஓரலாக சொல்வதுகலர்,பழங்கள்,காய்கறிகள்...ALPHABETS,NUMBERS,RHYMES ....) சொல்கிறான்.

என் பொண்ணு இதே வயதில் மிக அழகாக எழுதியதால்,இவன் இப்படி

எழுதுவதில் ஆர்வம் குறைவாய் இருப்பது கவலையை தருகிறது.பிற குழந்தைகளோடு சகஜமாக பேசுவதோ ,விளையாடுவதோ

இல்லை...அக்காவை தவிர..இந்த கூச்ச சுபாவமும் எப்போது மாறும் என

இருக்கிறது

உங்கள் குழந்தைகள் யாருக்கேனும் இந்த சிரமம் இருந்ததா ,,பிறகு

சரியாகிவிட்டதா என்பது பற்றி எனக்கு சொல்லுங்களேன்.

ஹாய் இளவரசி எப்படியிருகீங்க.என் மகனும் முதலில் இப்படித்தான் பென்சில் கையில் பிடிக்கவே மாட்டான்.நானும் உங்களைமாதிரிதான் பீல்பண்ணீனேன்.பிறகு கலர் பென்சி அவனிடம் கொடுத்து பிளையின் பேப்பரில் சும்மா எதாவது வரையப்பன்ணுவேன்.அதாவது சர்க்கிள்,square அந்தமாதிரி)நீங்களும் அந்தமாதிரி டிரைபண்ணி பாருங்கள்.
இரண்டாவது நீங்ககூறியமாதிரி இவனும் ரெம்ப கூச்சபடுவான்.அவன் சிறுபிளையாக இருக்கும்சமயம் டில்லியில் இருந்ததனால் வேறுகுழந்தைகளுடன் விளையாட வாய்ப்பு இல்லை. பிறகு ஊருக்கு போனவேளையில் பிறகுழந்தைகளுடன் விளையாடி இப்ப கூச்சகுணம் சுத்தமாக இல்லை.நீங்க கொஞ்சம் அவன வேறுகுழந்தைகளுடன் விளையாடவிட்டுப்பாருங்க கண்டிப்பாக இரண்டு.மூன்று நாள்களில் விளையாட ஆரம்பிச்சுடுவான்.பயப்படாதிங்க.நானும் ஆரம்பத்தில் இப்படித்தான் ரெம்படென்ஷனானேன்.

என் பையனும் 3.2 விலேயே ஸ்கூல் சேர்த்திட்டேன். அது வரைக்கும் அவனும் எழுதினதே கிடையாது. அப்ப டெலிவரிக்காக ஊரில் இருந்தேன். அதனால எல்.கே.ஜி அங்கதான் படிச்சான். நானும் முதல்ல கலரிங், ட்ராயிங்னுதான் ஆரம்பிப்பாங்கன்னு நினைச்சேன், ஆனா A,B , அ,ஆ, இந்தி, 123 நூ தினமும் நாலைஞ்சு பக்கம் ஹோம்வொர்க் கொடுத்து பட்டையக் கிளப்பிட்டாங்க;(
ஒருதடவை சொல்லிக்கொடுத்தா போதும் அழகா எழுதிக்காமிச்சுடுவான். ஆனா ஹோம்வொர்க் புக்க காமிச்சாலே தூக்கம் வந்துடும்;(

அப்புறம் அவனுக்கு பிடிச்ச பனானா சிப்ஸ் சின்ன சின்ன பீஸா? கட் பண்ணி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பீஸ் கொடுத்து எழுத வைப்பேன். அவனால எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவு எழுத வைச்சு மீதியெல்லாம் பெண்டிங்க வைச்சிருவேன். ஸ்கூல்லேயும் சொல்லிப்பார்த்தேன் இவ்வளவு ஹோம்வொர்க் கொடுக்காதீங்க எப்படி பையன் எழுதுவான்னு, ம்ஹும் அவங்க கேக்கறமாதிரி இல்ல, எல்லா பசங்களும் எழுதறாங்களேன்னுதான் காரணம் சொன்னாங்க, உங்க பையன் ரொம்ப ஸ்லோன்னு வேற சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க , அப்புறம் நானே அவன் மாதிரி எழுதிக்கொடுத்துடுவேன் இப்படி செய்யகூடாதுதான், ஆனா தினமும் அவன் முன்னாடியே எங்கப்பாகிட்ட (அவர்தான் கூப்பிடபோவார்) கம்ளைண்ட் பண்ணிவிடறதுனால அவனுக்கு ஹோம்வொர்க்பாத்தாலே இன்னும் அலர்ஜியாயிடுச்சு.

அவனுக்கு கூச்சசுபாவம் எல்லாம் இல்ல. யாராவது மிரட்டினாலும் பயப்படமாட்டான், அந்த சமயத்தில வாயக் கோணி கண்ண உருட்டி அழகு காமிச்சு அவங்கள சிரிக்கவைச்சுடுவான். ஸ்கூல்ல எல்லா மிஸூக்கும் அவன் செல்லம். அதனால எல்லாப் பொருப்பும் என் தலைல;(

இப்ப இங்க கேஜி 2 படிக்கிறான். ஹோம்வொர்க் ஜாஸ்தி இல்ல. ஆனாலும் கிடைக்கிற பேப்பர்லேயேல்லாம் எழுதி எழுதி தள்ளறான். வீடு பூரா ட்ராயிங்தான்;)
நீங்க மத்த பசங்களோட கம்பேர் பண்ணாதிங்கபா, அவனுக்கு இன்ட்ரஸ்ட் வரவரைக்கும் அவன் போக்குல விட்டு பிடியுங்க. எப்படியும் HALF YEARLYக்கு சரியாயிடுவான்.

Don't Worry Be Happy.

இளவரசி..

கவலைப்படாதீங்கப்பா.. முதல்ல உங்க பையன கலர் அடிக்க விடுங்க. கலரிங் புக் வாங்கி கொடுத்து அடிக்க சொல்லுங்க. அவன் டிவில எந்த ப்ரோக்ராம் ரொம்ப விரும்பி பாப்பானோ.. அதாவது டாம் அண்ட் ஜெர்ரி என்றால்.. அந்த கலரிங் புக் வாங்குங்க..இல்லைன்னா ஆன்லைன்ல பிரிண்ட்அவுட் எடுத்துக்கலாம். பிறகு பாருங்க.. தானா எழுத ஆரம்பிச்சுடுவான். அவனுக்கு பிடிச்சத வாங்கிக்கொடுக்கறதா சொல்லி எழுத சொல்லிப்பாருங்க. முதல்ல முரண்டு பிடிக்கற பசங்க கூட பிறகு போக போக எழுத ஆரம்பிச்சுடுவாங்க. தயவுசெய்து நம் பிள்ளைகளை மற்றவர்களோடு கம்பேர் பண்ணாதீா்கள். நம்மையும் மீறி நாம் இந்த தவறை செய்கிறோம். ஆனால் நாம் நினைப்பது நம் மனதோடு இருக்க வேண்டும். பசங்க கிட்ட சொல்லக்கூடாது. சொன்னா வேணும்னே இன்னும் அடம் பிடிப்பாங்க.. கவலைய விடுங்க.. கண்டிப்பா கூடிய சீக்கிரம் எழுத ஆரம்பிச்சுடுவான். நீங்க வேணும்னா அவன் அக்கா கூட போட்டி போட்டு எழுதனும்னு சொல்லி.. ஜாலியா ஆரம்பிங்க.. எல்லாம் தானா பழகிடும். என் பையனும் இப்படித்தான் இருந்தான். இப்ப ஓகே.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நன்றி எரிக் அம்மா(உங்க மகன் பெயர்தானே.. உங்க பேர் ஜெயந்தியா..?)போக போக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்..
வேறு வழி…
ஜெயலஷ்மி நன்றிப்பா..நீங்களும் எழுதினீங்களா :- !
நான் காலேஜ் ப்ரொபசர்……சோ குழந்தைங்க சைக்காலஜி புரிஞ்சு முடிஞ்சவரை மோடிவேட் பண்றமாதிரிதான் எல்லாதாஜாவும் செஞ்சு எழுத வைக்கிறேன்..எப்பவும் கம்பெல் பண்றதில்லை….போகப்போக பார்க்கலாம்.
ஆனா பொண்ணு விஷயத்தில நான் ஒண்ணுமே சொல்லிகொடுக்க வேண்டாம்…எல்லாத்திலயும் நல்லா பண்ணுவா அந்த வரை தப்பிச்சேன்..:-)
ராதா,உங்க பதிவுக்கு நன்றிப்பா..கம்பேர் பண்ணி அவனிடம் பேசாமலிருக்க முடியவில்லை…சில சந்தர்ப்பங்களில்….திட்டுவதற்காக இல்லாமல் அக்காவை சொல்லி ஆர்வம் வரவழைக்க முயற்சிக்கிறேன்…அவ்வளவுதான்..கலரிங் புக்ஸ் நிறைய ஸ்கூல்லயே கொடுக்கறாங்க..அதுவும் சும்மா கிறுக்குவான்...ஒழுங்கா பண்ணமாட்டான் சொன்னாலும்..:(

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நலமா? எல்லா தோழிகளும் சிறப்பான ஆலோசனை சொல்லிருக்காங்க. என்னோட ஒரு கருத்தையும் இங்க சொல்றேன். உங்க பொண்ணு எழுதும் போது நீங்களும் பக்கத்துல உட்கார்ந்து உங்க பையனுக்கு காட்டுங்க. பொதுவாவே குழந்தைங்க அடுத்தவங்க செய்றத தானும் செய்ய ஆசை படுவாங்க. இன்னொரு ஐடியாவும் இருக்கு. அவன் எழுதும் போது நீங்களும். எழுதுங்க. அதுக்கு முன்னாடி சின்ன கோடுகள், வட்டங்கள், படங்கள் நீங்க வரைஞ்சு காட்டுங்க. ஒவ்வொரு எழுத்துலயும் ஒரு படம் கிரியேட் பண்ணி காட்டுங்க. எடுத்தவுடனே எழுத்துக்கள் எழுத பழகுறத விட படம் வரைய சொல்லிகொடுங்க. எழுத்தும் அழகா வரும்.
அன்புடன்,
சுஜாதா சுதாகர்

கூச்ச சுபாவம் தானா மாறிவிடும் டோன்ட் வரி.அடுத்தவர்கள் முன்பு வர கூச்சப்பட்டாலோ அல்லது தயங்கி நின்றாலோ நாலு பேர் முன்பே அவன் ரொம்ப கூச்சம் என்று சொல்லாமல் மெல்ல எல்லோருடனும் பழக விடலாம் அல்லது விரும்பாவிட்டால் விட்டு விடலாம்...நீங்கள் நாலு பேரிடம் பழகும் விதத்தை பார்த்து கூட மெல்ல மாறி விடுவார்

எழுத்தை பொறுத்தவரை அவங்களுக்கு ஷேப்சை பற்றிய ஒரு ஐடியா கிடைத்தால் போதும் எழுத தொடங்கினால் விட மாட்டார்கள்...அதற்கு பள்ளி செல்லும் முன்பே சின்ன சின்ன ஷேப்ஸை பழக்க வேண்டும்...நான் முன்பு பல மாதங்களுக்கு முன் அறுசுவையில் கேட்டிருக்கிறேன் அன்று மகளுக்கு எழுத தெரியாது.ஆனால் இன்று வரை நான் கைய்யை பிடித்து எழுத வைத்ததே இல்லை அவ்வளவு அழகாக எழுதி விடுவாள்.
..அதற்கு நல்ல கிறுக்க அனுமதியுங்கள்..என் மகள் போர்டில் கிறுக்கி பழகினாள்.. தெரியாமல் கிறுக்கும்பொழுது வரும் ட்ரையாஙில் சர்கில் போன்றவற்றை கூட இன்ன ஷேப் என்று சொல்லி பாராட்டி பாருங்கள் புரிந்து விடும்..
பெரிய பெரிய ஸ்டென்சில் வாங்கி வரைய விடுங்கள்..வடிவங்கள் எளிதில் வரும்

மேலும் சில பதிவுகள்