மசால் மொச்சை

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்த மொச்சைப்பருப்பு - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
நறுக்கின சின்ன வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கின பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
உப்பு - தேவையான அளவு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - அரை கப்


 

மொச்சைப்பருப்பை சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் பாதி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சோம்பு தாளித்து, நறுக்கின வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு கடலை மாவில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி, காரம் தேவையானால் சிறிது மிளகாய்ப் பொடி சேர்த்து, மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி பிசறி வைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை மொச்சை பருப்புடன் கலந்து, தாளிப்பில் போட்டு, ஒரு தட்டை போட்டு மூடி வைத்து, சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
மாவு நன்கு வெந்ததும் திறந்து கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.
இதே போல் உருளைக்கிழங்கை வேகவிட்டு துண்டுகளாக நறுக்கியும் செய்யலாம். இது மதுரை பக்கம் மிகவும் பிரபலமான மசால் கிழங்கு.


மொச்சை பருப்பு கிடைக்கும் காலங்களில் இதனை செய்து பார்க்கலாம். ரசம், சாம்பார் சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும். எண்ணெய் சற்று தூக்கலான பதார்த்தம் இது.

மேலும் சில குறிப்புகள்