மாங்காய் குழம்பு

தேதி: October 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மாங்காய் - 1
2. சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி - 1/2
4. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
5. வெல்லம் - 4 தேக்கரண்டி
6. உப்பு
7. எண்ணெய்
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. உளுந்து - 1/2 தேக்கரண்டி
11. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை


 

மாங்காய், வெங்காயம், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து லேசாக பிரட்டவும்.
இதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
மாங்காய் குழம்பு செய்முறை நல்லா இருக்கு.ஆனால் ஏன் வெல்லம் சேர்க்கணும்?(தப்பா எடுத்துக்காதீங்க).இனிப்பாக இருக்காதா? நான் பாகற்காய் காரக்குழம்பில்,பாகற்காய் ரொம்ப கசந்தால் மட்டுமே,காரக்குழம்பில் சிறிது வெல்லம் சேர்ப்பேன்.

ஹர்ஷா... தப்பாலாம் நினைக்க மாட்டேங்க... ;) அம்மா'வும் வெல்லம் சேர்க்காம செய்வாங்க, ஆனா இதோட ருசி வித்தியாசமா நல்லா இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம்'னு எல்லாம் கலந்து. தயிர் சாதத்தோட சம சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உடனடி பதிலுக்கு நன்றி.செய்து பார்த்துட்டு பதிவு போடுறேன்.