பிரண்டை துவையல்

தேதி: October 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

1. பிரண்டை - ஒரு பிடி
2. வெங்காயம் - பாதி
3. காய்ந்த மிளகாய் - 2 அ 3
4. தனியா - 1/2 தேக்கரண்டி
5. பூண்டு - 3 அ 4 பல்
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - வதக்க

தாளிக்க:
1. கடுகு - 1/4 தேக்கரண்டி
2. உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
3. கறிவேப்பிலை - சிறிது
4. எண்ணெய் - தாளிக்க


 

பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.
வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.
பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.


கிராமங்களில்,பொங்கல் திருவிழாவின் போது,வெண் பொங்கலுடன் இந்த பிரண்டை துவையலையும் சேர்த்து
சூரிய பகவானுக்குப் படைப்பார்கள்.பிரண்டை பித்தம் மற்றும் வாய்வுக்கு ரொம்ப நல்லது.இது சூடு என்பார்கள்.அதனால்,கர்ப்பிணிப்
பெண்கள் சாப்பிடக் கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேத்து தான் பிரண்டை பகுதி ஓபன் பண்ணி பார்த்தேன். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணேன்னு குறிப்பு இருந்தது. அதுக்கு துணையா 2 குறிப்பு கொடுத்து அசத்திட்டீங்க..

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
எப்பவோ ஒரு முறை பிரண்டை துவையல் சாப்பிட்டு இருக்கேன்.ரொம்ப நல்லா இருந்தது.அதுக்கு பிறகு பிரண்டை கிடைக்கவே இல்லை.எங்க அம்மாவுக்கு இது ரொம்ப பிடிக்கும்.பிரண்டை எனும் பகுதி பார்த்த பிறகு தான்,அம்மாவிடம் கேட்டு,குறிப்பு கொடுத்தேன்.உங்க பதிவுக்கு நன்றி.