பிரண்டை கடைசல்

தேதி: October 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

தேவையான பொருட்கள்:
1. பிரண்டை - ஒரு பிடி
2. துவரம் பருப்பு - ஒரு பிடி
3. வெங்காயம் - பாதி
4. தக்காளி - ஒன்று
5. காய்ந்த மிளகாய் - 3 அ 4
6. பூண்டு - 3 அ 4 பல்
7. புளி - நெல்லிக்காய் அளவு
8. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - வதக்க

தாளிக்க:
1. கடுகு - 1/4 தேக்கரண்டி
2. சீரகம் - 1/4 தேக்கரண்டி
3. கறிவேப்பிலை - சிறிது
4. எண்ணெய் - தாளிக்க


 

பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய்,வெந்தயம்,பிரண்டை துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.
வதங்கியதும்,அதனுடன் தக்காளி,புளி,உப்பு,தேவையான தண்ணீர் சேர்த்து, நன்கு வேக வைக்கவும்.
வெந்ததும்,காய்ந்த மிளகாய்,வெங்காயம்,பூண்டு,தக்காளி,புளி சேர்த்து நன்கு அரைக்கவும்.பின்,துவரம் பருப்பு மற்றும் பிரண்டை சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில்,கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடைசலில் சேர்க்கவும்.
பிரண்டை கடைசல் தயார்.இந்த கடைசல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.


அவசரத்துக்கு,உடனே செய்ய வேண்டுமெனில்,துவரம் பருப்பு இல்லாமல்,மற்ற பொருட்களை எண்ணெயில் வதக்கி,தக்காளி,புளி சேர்த்து
வேக வைத்தும் கடையலாம்.பிரண்டை உடம்புக்கு ரொம்ப நல்லது..பசியைத் தூண்டும்.ஜீரணத்துக்கு உதவும்.சளி,இருமல் மற்றும்,ஆஸ்த்துமாவிற்கு நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்முறை நல்லா இருக்கு பா. கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தரேன்.

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
நானும் இதை சாப்பிட்டது இல்லை.அம்மாவுக்கு பிடித்தமான டிஷ் இது. நேற்று தான் குறிப்பு கேட்டு அனுப்பினேன்.கிடைத்ததும் செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

அன்பரசி,
உங்களுக்கு பிரண்டை கிட்டுதா?
என்ன பெயர் பா?நான் இது வரையில் இங்கே பார்த்ததே இல்லை
எனக்கு ரொம்ப பிடிச்சது ..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
எனக்கு இங்கு பிரண்டை கிடைத்து இருந்தால் விளக்கப்படக் குறிப்பு அனுப்பி இருப்பேனே....நான் பிரண்டை துவையல் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகுது.அதன் சுவை கூட மறந்து விட்டது.நல்லா இருக்கும்னு மட்டும் நியாபகம் இருக்கு.உங்க பதிவுக்கு நன்றி.