மாங்காய் குழம்பு

தேதி: October 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (10 votes)

 

மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - பாதி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
வெல்லம் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

மாங்காய், வெங்காயம் (சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயமும் சேர்க்கலாம்), தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கின வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து லேசாக பிரட்டவும்.
இதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா, மாங்காய் குழம்பு பார்த்த உடனே வாய் புளிக்க ஆரம்பிச்சிடுச்சி. இன்னைக்கே பண்ணிட்டு சொல்றேன். குறிப்புகள் தெளிவாகவும், அழகாகவும் உள்ளன. வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மாங்காய் குழம்பு ஸ்ஸ்ஸ் மணக்குது வனி

ஜலீலா

Jaleelakamal

சூப்பர் குறிப்பு. பாட்டி ஞாபகம் வந்துடுத்து. இதே மாதிரி தான் பாட்டி செய்வாங்க. அந்த வாசம் கூட வருது வனி. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்றேன். இது வரைக்கும் இதை ஏன் நான் ட்ரை பண்ணலைன்னு புரியலை. ஆனா புளி, மாங்காய் ரெண்டுமே புளிப்பு தானே, அப்படியிருக்க தக்காளி தேவையானு ஒரு சந்தேகம், பாட்டி தக்காளி சேர்க்க மாட்டாங்க. சரி சேர்த்தும் சேர்க்காமலும் ஒரு முறை ட்ரை பண்ணிட்டு சொல்றேன். விருப்ப பட்டியலில் இப்போ இந்த குறிப்பு!! 5 ஸ்டாரும் கொடுத்திட்டேன்!!:))

அன்புடன்
பவித்ரா

வனிதா,
அட,நேத்து தான் குறிப்புக்கு பதிவு போட்டேன்.இன்னைக்கே விளக்கப் படக் குறிப்பு வந்துடுச்சா?வனிதா கலக்குறீங்க.வாழ்த்துக்கள்.

Mango kulambu looks great.We will try this soon.

வனிதா உங்கள் மாங்காய் குழம்பு பார்த்த உடனேயே செய்யலாம் என (மாங்காய் கைவசம் இருந்த படியால்) நினைத்தேன்.ஆனால் ஒரு டவுட் மாங்காயின் தோல் எடுக்கத்தேவை இல்லையா? அப்படியே சமைத்தால் குழம்பில் தோல் வாடை அடிக்காதா? தவிரவும் தோல் நன்றாக அவிந்து சாப்பிடக் கூடியதாக இருக்குமா?முடிந்தால் பதில் தரவும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனி மாங்காய் குழம்பு பலே பலே....நா ஊறுது.
ஒரே ஒரு ட்வுட் வனி எனக்கு ( ஆரம்பிச்சுட்டாண்டான்னு முறைக்க படாது...ஒ...கே...)
வெல்லத்தை தாளிக்கும் போதே போடக் கூடாதா என்ன...?
தப்பா இருந்தா ஸாரி....வனி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

ஜலீலா.... மிக்க நன்றி :)

பவி... மிக்க நன்றி. புளிப்பு அதில் இருக்கும் என்பதால் தான் தக்காளி மிக குறைவாக சேர்த்திருக்கேன். போடாமலும் செய்யலாம். செய்து பாருங்க. :)

ஹர்ஷா... மிக்க நன்றி. நேற்று உங்க பதிவு பார்த்து பதில் போட்டேன், பார்த்தீங்களா?? நான் இன்னும் அந்த இழை பார்க்கல. ;)

அருண்ராஜ்... இப்போதே பார்த்து பதில் கொடுத்துடறேன். மிக்க நன்றி :) செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

யோகராணி... மிக்க நன்றி. தோல் எடுக்க வேண்டாம், நல்லா வெந்துடும். தோலுக்கும் ஒரு வாசம், சுவை இருக்கே, அதுவும் சேர்ந்தா நல்லா இருக்கும். சில வகை மாங்காய் தோல் ரொம்ப கெட்டியா இருந்தா, பிடிக்கலன்னா எடுத்துடுடுங்க.

அப்சரா... மிக்க நன்றி. வெல்லம் கடைசியா சேர்த்தா அளவா கொதிக்கும், முதல்ல சேர்த்தா மாங்காய் வேகும் நேரம் கொதித்து பதம் போயிடும். சரியோ??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா... மாங்காய் குழம்பு.. ம்ம்ம் யம்மி.. பாத்தாலே புளிப்பு சுவை தோணுது.. ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹலோ வனிதா,
உங்களுடைய மாங்காய் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக வந்தது. குறிப்புக்கு மிக்க நன்றி.
சுகந்தா

மாங்காய் குழம்பு அருமையாக உள்ளது வித்யாசமான குழம்பு செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.அருசுவையில் அருமையான குறிப்புகள் வருகின்றன.இந்த குரிப்பை ட்ரை பன்னிட்டு சொல்கிறேன்.

வனிதா உங்கள் மாங்காய்க் குழம்பு இன்று செய்தேன் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.மேலும் பல புளிப்பான ரேசப்பி தர வேண்டுகிறேன்:-)

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மாங்காய் குழம்பு நேற்று செய்தேன், அம்மா அதில் கொஞ்சம் புளி கரைத்து சேர்த்தார்கள். நல்லாருந்தது. நன்றி.

அன்புடன்
பவித்ரா

ராதா ஹரி... மிக்க நன்றி. அவசியம் செய்து சாப்பிட்டு சொல்லுங்க :)

சுகந்தா... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி :)

nasi... மிக்க நன்றி. அறுசுவையில் குறிப்புகளுக்கு பஞ்சமே இல்லை... எல்லாம் ஒவ்வொன்றாக முயற்சி செய்து பாராட்டு வாங்குங்க. :)

யோகராணி... செய்து பார்த்து பின்னூட்டம் தந்து மகிழ்ச்சி ஆக்கிட்டீங்க... மிக்க நன்றி. ரொம்ப புளிப்பா இருந்ததோ??? ;)

பவி... இன்னும் புளிப்பு சேர்த்தீங்களா???!!! கலக்குங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I tried this one. It came out very well. Thanks for sharing this recipe with us. Keep posting more recipes.

When there is a will,there is a way.... :)

செய்து பார்த்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா