ஆலு கோபி கிரேவி

தேதி: October 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (10 votes)

 

உருளை - 2
காலிப்ளவர்- 1 கப்
வெங்காயம்-2
தக்காளி-1
மீட் மசாலா- 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-2
தயிர்- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
தேங்காய் பால்- 1கப்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- 2 மேசை கரண்டி


 

காலிப்ளவரை சுடுநீரில் 5 நிமிடம் வைத்து பின் வடிகட்டி எடுக்கவும்.

உருளையை தோலுடன் நான்காக நறுக்கவும்.

இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தயிர், உப்பு, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மீட் மசாலா சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியது இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வாசனை போக கிளறவும்.

அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்

பின்னர் ஊற வைத்த கலவையை சேர்த்து தேங்காய் பாலும் விட்டு காய்கறிகளை வேகவிட்டு பிறகு பரிமாறலாம்


உருளை கிரேவியில் வெந்ததும் உதிர்ந்துவிடும் என்பதால் தோலுடன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அரைபதமாக வேக விட்டு தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து, காலிப்ளவர் அரைபதமாக இருக்கும் போது கிரேவியில் சேர்க்கலாம். மீட் மசாலா இல்லையென்றால் கறிமசாலா சேர்க்கலாம் .தேங்காய் சாதம்,புரோட்டா, சப்பாத்தி,பூரி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமி,
ஆலு கோபி க்ரேவி,தயிர்,தேங்காய்ப் பால் சேர்த்து செய்தது இல்லை.எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.படிக்கவே,சாப்பிடணும் போல இருக்கு. நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

ஆமினா ”ஆலு கோபி கிரேவி”

ஆமினா சூப்பர் குறிப்பு விதவிதமான குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்களே வாழ்த்துக்கள், நீங்கள் தரும் குறிப்புகளில் தேங்காய்பால் சேர்த்து செய்வது அதிகமாக உள்ளது சிரமப்படாமல் செய்தால் சுவை நன்றாகவே இருக்கும் போல, குறிப்புக்கு நன்றி, கண்டிப்பா செய்து பார்க்கிறேன். ஒரே மதிரியான குருமா செய்து அலுத்துவிட்டது இதுபோல் செய்து பார்த்துவிட்டு பினுட்டம் தருகிறேன்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

கீழக்கரை, திண்டுக்கல் பகுதிகளில் அதிகமாக தேங்காய் சேர்ப்பார்கள் நித்யா.
சென்னையில் நான் இருக்கும் போது தனி வீடு. வீடு சுற்றி 8 தென்னை மரங்கள். அதனால் எல்லா சமையலிலும் இடம் பெறும். இங்கே லக்னோ வந்த பிறகு தான் குறைத்து கொண்டேன் (1 தேங்காய் 25 ரூபாய். பூஜை நேரங்களில் கிடைப்பதே அரிது). தேங்காய் பால் சேர்த்தால் வாசமும் சுவையும் கிடைப்பதால் தான் அவ்வாறு சேர்க்க குறிப்பிட்டேன் நித்யா. நீங்க மொத்தமா பால் எடுத்து வச்சு ப்ரீசலில் வச்சா சமையல் எளிதாக முடியும்...

இது போல் செய்து பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்

நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சூப்பரா இருக்கும் ஹர்ஷா. புரோட்டா, தேங்காய் பால் சாதம் செய்யும் போது இதையும் சேர்த்து செய்வேன். இந்த க்ரேவியை தான் கொத்து புரோட்டாவிற்கும் உபயோகிப்பேன்.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,
சூப்பர் கிராவி பா
எனக்கு இப்பவே சாப்பிடனும் போலே இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா... சூப்பரா இருந்தது ரொட்டி கூட. தயிர் சேர்த்து நல்ல சுவை. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனிதாக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi amina,
yesterday night i did this with poori. it came out very well.my hubby appreciated it a lot.thanks for ur super recipie.

மிக்க நன்றி கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா