முருங்கை கீரை சாம்பார்

தேதி: October 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (12 votes)

 

துவரம் பருப்பு- 100
முருங்கை கீரை- 1/2 கப்
வெங்காயம்- 2
தக்காளி- 1
பச்சை மிளகாய்- 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு- சிறிதளவு
வெள்ளை பூடு- 8 பல்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கத்திரிக்காய்- 2
பெருங்காயம்- சிறிதளவு
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 2 மேசை கரண்டி


 

பருப்பை அலசி அத்துடன் வெள்ளை பூடு, தக்காளி,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.

பின்னர் அதில் கத்தரியும், கீரையும் சேர்த்து ஒரு விசில் விட்டு உடனே திறந்துவிடவும்.

வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்

பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்

அதனை பருப்பில் சேர்த்து தேவையான நீர் சேர்த்து சிறுது நேரம் கொதிக்க விட்டு பின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமி,
முருங்கைக் கீரை குறிப்பா கொடுத்து,என் ஆசையை இன்னும் அதிகமாக்குறீங்களே... நான் முருங்கைகீரையில் சாம்பார் வைத்து இருக்கிறேன்.ஆனால் கத்தரிக்காயும் சேர்த்து செய்தது இல்லை.கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.இதற்கு புளி சேர்க்கத் தேவையில்லையா?

நித்திலா-
ஊரில் இருக்கும் வரை நானும் முருங்கை காஉ தான் சேர்ப்பேன். ஆனா இங்கே சந்தையில் போனால் தண்டங்கீரையில் உள்ள தண்டு போல நீளமாக காய் இருக்கு. அதான் முருங்கைகாயாம். பிஞ்சாக இருக்கையிலேயே பறித்து விற்பாங்க. அதையும் வாங்கிட்டு போய் குழம்பு வைப்பாங்களாம். அதுல சதை பகுதியே இருக்காதுன்னு வாங்குவதில்லை.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க நித்திலா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இதற்கு புளி தேவையில்லையா.

மேலே மூன்றாவது போஸ்ட்டில் ஆமினா இதற்குப் புளி தேவையில்லை என்று சொல்லியிருக்கிறாங்க.

‍- இமா க்றிஸ்

ஆமி,
நாங்க முருங்கைக்காய் சாம்பார் அடிக்கடி செய்வோம்.அதுலதான் கத்திரிக்காய் போடுவோம்.முருங்கைக்கீரை கூட கத்தரிக்காய் போட்டிருக்கீங்க.செஞ்சு பார்க்கிறேன் ஆமி.சுவையான குறிப்பு கொடுத்த ஆமிக்கு,என்னுடைய நன்றிகள்.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

ஹர்ஷா

என் நாத்தனார் ஆந்திராவில் செய்வதாக சொன்னார். நானும் அதே முறையில் செய்து பார்த்தேன். இங்கே முருங்கை காய் கிடைக்காததால் வெறும் கத்தரிக்காய் மட்டும் போட்டேன். நான் எப்போதும் சாம்பாருக்கு புளி சேர்ப்பதில்லை அன்பரசி.(புளிகுழம்பு,ரசம் என எல்லாவற்றிற்கும் சேர்ப்பதால் சாம்பாரில் சேர்ப்பதில்லை. அதிகமாக புளி சேர்த்தாலும் உடலுக்கு கெடுதி இல்லையா. அதான் :)

சாம்பார் சாதம்,தாலிச்சாவில் மட்டும் தான் சேர்ப்பேன்.

மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Thank you so much Aamina! Perfect explanation, I will try out right away and I am sure sambar will be yummy!

thank you so much

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா