மஞ்சள் பொங்கல் சாதம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிறிய சிட்டிகை
தாளிக்க:
நல்லெண்ணை - ஒரு மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு-சீரகம் உடைத்தது - ஒரு தேக்கரண்டி
காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

வெறும் வாணலியில், பருப்பை மணம் வரும் வரை வரட்டாக வறுக்கவும்.
அதை இறக்குவதற்கு முன்பு அரிசியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.
பிறகு நன்கு கழுவி, வடிய வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தில் தாளிப்பதற்கு, என்ணையும் நெய்யும் விடவும்.
காய்ந்ததும், தாளிக்கும் சாமன்களைப் போடவும். அவை காய்ந்ததும், அரிசி பருப்பு கலவையைப் போட்டு தண்ணீர் விடவும். உப்பு, மஞ்சள் பொடி போடவும்.
நீங்கள் வழக்கமாக சாதத்திற்கு விடும் தண்ணீரை விட சிறிது கூட விட்டால் போறும். அப்பொழுது தான் சாதம் மாதிரி உதிராக இருக்கும், இல்லாவிட்டால் பொங்கல் மாதிரி குழைந்து விடும்.
சாப்பிடும்போது சிறிது நல்லெண்ணை ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள, குழம்பு வகைகளில் கொடுத்திருக்கும் தாளகம் ஏற்றது.


பொங்கலன்று, சர்க்கரைப் பொங்கலுடன் சூரியனுக்குப் படைக்க ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்