பட்டர் பீன்ஸ் கூட்டு சமையல் குறிப்பு - படங்களுடன் - 16701 | அறுசுவை


பட்டர் பீன்ஸ் கூட்டு

வழங்கியவர் : radha hari
தேதி : வெள்ளி, 15/10/2010 - 10:23
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.5
4 votes
Your rating: None

 

 • பட்டர் பீன்ஸ் - 250 கிராம்
 • சின்ன வெங்காயம் - 5
 • அல்லது பெரிய வெங்காயம் - 1
 • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 • தேங்காய் - கால் கப்
 • கசகசா - ஒரு மேசைக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - சிறிதளவு
 • கடுகு - கால் தேக்கரண்டி
 • சீரகம் - கால் தேக்கரண்டி
 • உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிதளவு

 

முதலில் பட்டர் பீன்ஸை குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கசகசாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு வேக வைத்திருக்கும் பட்டர் பீன்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கசகசா கலவையை போட்டு சிறிது உப்பு சேர்த்து (பீன்ஸ் வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்திருப்போம்) ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி.ராதாக்கா

கூட்டு சூப்பர் ஆனா பட்டர் பீன்ஸ் என்றால் என்ன என்று தான் தெரியலை. சாதா பீன்ஸ்னு சொல்லுவோமே அதுவா, சன்னா மாதிரி ஊறவைத்து செய்யறதா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ராதாக்கா

ராதாக்கா,
பார்த்தாலே டேஸ்ட்டான ரெசிப்பினு தெரியுது.செய்து பார்க்கிறேன்.தங்கள் குறிப்புக்கு நன்றி.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

பாச மலரே

ஒரு வாரமா குஜராத்ல வெறும் ரொட்டியை சாப்பிட்டு நம்ம ஊர் சாப்பாட்டை எப்போ சாப்பிடுவதுன்னு வந்துகிட்டுருக்கேன். அதனால அண்ணாவுக்கு பட்டர் பீன்ஸ் கூட்டு ஒரு பார்சல் அனுப்பிடுங்க.

அன்புடன்
THAVAM

பட்டர் பீன்ஸ் கூட்டு!


ராதா ! கூட்டு பண்ணிட்டு சொல்றேன்!

பவி! பட்டர் பீன்ஸ்னு கடைல கேட்டா தருவா!

அதை பச்சை பட்டாணி மாறி உறிச்சுட்டு உள்ள இருக்கறதை எடுத்து சமைக்கனும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பட்டர் பீன்ஸ் கூட்டு

ராதா, பட்டர் பீன்ஸ் கூட்டு நல்ல சத்தான குறிப்பு. கசகசாவும், தேங்காயும் வயிற்றுப் புண்ணை குணப்படுத்து. பட்டர் பீன்ஸ் புரதச் சத்து நிறைந்த சத்துள்ள தானியம். நல்ல ஆரோக்கியமான குறிப்பை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் :) தொடரட்டும் சத்தான சமையல் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதா,

ராதா,
பட்டர் பீன்ஸ் கூட்டு வழக்கம் போலவே அருமை.வாழ்த்துக்கள்.ஆனால்,வெங்காயம் எப்போது சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடவில்லையே.

ராதா

குறிப்பு அருமை,பட்டர் பீன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இங்க கிடைக்காது,
அம்மா கொத்துகறியுடன் சேர்த்து செய்வாங்க.

ராதா

ராதா

நல்ல சத்தான குறிப்பு
தொடர்ந்து பல குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி, நித்திலா, தவமணி அண்ணா, மாமி

பவி
பட்டர் பீன்ஸ் கடைகளில் கிடைக்கிறதுப்பா. மாமி சொன்ன மாதிரி பச்சைபட்டாணி போல் தான்இருக்கும். உரித்துக்கொள்ள வேண்டும். பிரியாணிகளில் சேர்ப்பார்கள். குருமா செய்வார்கள். நன்றாக இருக்கும். வாங்கி ட்ரை பண்ணி பாரு. நானே கரூர்ல வாங்கி சமைத்திருக்கிறேன். மார்கெட் போய் பாரு. இருக்கும்.

நித்திலா
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. சரியா!

அண்ணா
உங்களுக்கு இல்லாததா? நீங்கள் மட்டும் என் வீட்டுக்கு வந்தா விதவிதமா சமைச்சு போட்டு அசத்துறேன். பார்சல் பண்ணினா வீணா போய்டும். அதுனால வீட்டுக்கு வந்துடுங்க அண்ணி பசங்க எல்லாரையும் கூட்டிட்டு. சிங்கப்புர்க்கு ஒரு டிரிப் அடிங்க.

மாமி
ரொம்ப நாள் கழிச்சு என்னோட குறிப்பு பக்கம் வந்து தலை காட்டிருக்கேள். பவிக்கும் சொல்லிக்கொடுத்துட்டேள். தேங்க்ஸ் மாமி.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்பனா, அன்பரசி, ரீம், ஆமினா

கல்பனா
என்னோட குறிப்புக்கு இவ்ளோ நன்மை இருக்கா? :)
தேங்ஸ்பா. நானே இதை எல்லாம் யோசிக்கல. டேஸ்ட் மட்டும் தான் பார்த்தேன். கண்டிப்பா செய்து பாருங்க.

அன்பரசி
மிக்க நன்றிப்பா.. ஒவ்வோர் முறையும் குறிப்பு அனுப்பும்போது பலமுறை வாசித்துவிட்டு தான் அனுப்புவேன். எப்படி வெங்காயம் சேர்க்கும் இடத்தை மறந்தேன் என்று தெரியவில்லை. கடுகு எல்லாம் தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கிவிட்டு பிறகு பட்டர் பீன்ஸ் சேர்க்க வேண்டும். நான் அட்மின் கிட்ட சொல்லி மாத்தப்பாக்குறேன். தேங்ஸ்பா...

ரீம்
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. பச்சைப்பட்டாணில கூட இதே மாதிரி செய்து பார்க்கலாம். ஃப்ரோசன் பட்டாணி கிடைக்கும் தானே. அதில் செய்து பாருங்கள். எல்லா விதமான பருப்பு வகைகளிலும் பண்ணலாம்.நிலக்கடலை, கொண்டைக்கடலை... போன்றவைகளை கூட இதே போல் செய்யலாம்.

ஆமி
தேங்ஸ்பா. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. செய்து பார்த்துட்டு சொலலுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி