ராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி?

தேதி: October 15, 2010

4
Average: 3.9 (12 votes)

இந்த மலர்ச்செண்டை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 25 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

செயற்கை ராஃபியா - மஞ்சள், செம்மஞ்சள், பச்சை நிறங்களில்
ஃப்ளோரல் டேப் - பச்சை நிறம்
கத்தரிக்கோல்
குரடுகள்
கம்பிகள் :
மெல்லிய செப்புக்கம்பி - நூல் போல் பயன்படுத்துவதற்கு
வளையக்கூடிய கம்பி - இலைகளுக்கு
சற்று மொத்தமான கம்பி - பூக்களின் காம்புகளுக்கு

 

ராஃபியா மலர்செண்டு செய்ய தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பச்சை நிற ராஃபியாவில் 8.5 செ.மீ அளவான துண்டுகளும், மஞ்சள் நிறத்தில் 10.5 செ.மீ அளவான துண்டுகளும், செம்மஞ்சள் நிறத்தில் 5 செ.மீ அளவான துண்டுகளும் வெட்டி வைக்கவும். (எண்ணிக்கை அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு பூவுக்கு 5 அல்லது ஆறு இதழ்கள் என்ற கணக்கில் வெட்டவும்.)
பச்சை மற்றும் மஞ்சள் நிறத்துண்டுகளை மட்டும் கிழிந்துவிடாமல் பத்திரமாகப் விரித்து வைக்கவும்.
படத்தில் உள்ளவாறு வெட்டி வைத்திருக்கும் ராஃபியா துண்டுகளை முறுக்கி வைத்துக் கொள்ளவும்.
முறுக்கிய மஞ்சள் நிறத் துண்டுகளை இரண்டாக மடித்து இதழ் போல் பிடித்து, செப்புக்கம்பியால் கட்டி வைக்கவும்.
பச்சை நிறத் துண்டுகளையும் இது போல் கட்டி வைக்கவும். சிலவற்றை நடுஅளவான கம்பியினால் கட்டி வைக்கவும்.
ஆரஞ்சு நிறத் துண்டுகளில் மூன்றினை எடுத்து நடுவில் மொத்தக் கம்பியை வைத்துப் பாதியாக மடித்துப் பிடித்துச் சுற்றிக் கொள்ளவும். இது மகரந்தம்.
மகரந்தத்தை சுற்றிலும் ஐந்து அல்லது ஆறு இதழ்களை வைத்துச் செப்புக்கம்பியால் கட்டவும்.
கட்டுக் கம்பி தெரியாதவாறு ப்ளோரல் டேப் கொண்டு சுற்றி, அப்படியே கீழே இறக்கிக் காம்புப்பகுதியையும் சுற்றிக் கொள்ளவும். மகரந்தத்தை அளவுக்கு வெட்டி விட்டு மெதுவாகப் பிரித்துவிடவும்.
இலைகளுக்கும் பச்சை டேப் சுற்றி எடுக்கவும். ஒரு துண்டு மொத்தக் கம்பி எடுத்து ஒரு முனையை மடிக்கவும். அங்கிருந்து பச்சை டேப் சுற்ற ஆரம்பித்து, ஒவ்வொரு இலையாக (செப்புக்கம்பியால் சுற்றி உள்ளவை மட்டும்) மூன்று இலைகள் இணைத்து நெட்டுப் போல் செய்யவும்.
மொட்டுக்கு இரண்டு மஞ்சள் இதழ்களை மட்டும் சேர்த்துக் கட்டி டேப் சுற்றவும்.
இனி விருப்பம் போல் அனைத்தையும் சேர்த்து முறுக்கி, முறுக்கிய இடத்தில் மீண்டும் டேப் சுற்றி மறைத்து விடவும். அழகான ராஃபியா மலர்ச்செண்டு ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா
மிகவும் அழகாக இருக்குது,வாழ்த்துகள் உங்களுக்கு.
காயத்திரி

இமா... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. செய்து பார்க்க ஆசையா இருக்கு, ஆனா நீங்க சொல்லும் ராஃபியா எதுனு தான் தெரியல. கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கனகாலத்துக்குப் பிறகு. ;) எப்பிடி இருக்கிறீங்கள் காயத்ரி? வீட்டில எல்லாரும் சுகம்தானே?
கருத்துக்கு நன்றி.

வனிதா,
ராஃபியா... பாக்கிங் டேப். கிஃப்ட்ஸ் கட்டவும் பயன்படுத்துவாங்க.
இயற்கை நாடா மினுமினுப்பு இல்லாமல் இருக்கும். இதுல தொப்பி, பைகள் எல்லாம் பின்னுவாங்க.
செயற்கை - அனேகம் பளபளா என்று இருக்கும். முதல்முதலில் ஏதோ பாக் செய்து வந்த நாடாவில் ஒரு பூ செய்தேன். பிறகு டாலர் ஷாப்பில் கண்ணில் பட்டது. முன்னால ஒரு 'பூந்தொட்டி உறி' குறிப்பு வந்துது, நினைவு இருக்கா?
இதுல 'ஹவாயன் ஸ்கர்ட்ஸ்' பண்ணுவாங்க.
'பஸிஃபிக் ஐலண்டர்ஸ்' இது நிறைப் பயன்படுத்துவாங்க.

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகாக இருக்குது, இது மாதிரி நான் செஞ்சு பார்த்தன். பயனுள்ள குறிப்பு வாழ்த்துக்கள்...

சுகன்யா

புதுவரவா? ;) நல்வரவு சுகன்யா.
பூக்கள் செய்து பார்த்ததற்கு நன்றி. எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே. ;)

‍- இமா க்றிஸ்

இனி பார்ட்டிலே டேபிள் அலங்கரிக்க இத செஞ்சுட வேண்டியது தான்..........ரொம்பவே அழகு....வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

super,romba alaha irrukku

நன்றி லாவண்யா & ஸ்வேதா. ;)

‍- இமா க்றிஸ்

இமா ராபியா என்றதும் ஒன்றும் புரியல. எங்க வீடுகளில் இஸ்லாமிய பெயர்.

ஓ இந்த பூ பெயர் ராஃபியா வா. சூப்பர் இமா.

ஜலீலா

Jaleelakamal

ர்ஃபியா மலர்ச்செண்டு சூப்பரா இருக்குமா. கைவசம் எல்லா சாமான்களும் இருந்தா உடனே செய்து பாத்திருப்பேன்.

முன்னால உங்க குறிப்புல 'பல்லாரி', 'உள்ளி' எல்லாம் சொல்லி என்னைக் குழப்பினீங்க இல்ல. நல்லா வேணும் ஜலீலாக்கு. ;)))
அந்த டேப் பெயர் ராஃபியா.

சித்ரா, நீங்க எங்க இருக்கீங்க என்று தெரியலயே! டேப்... பாக்கிங்ல கூட சேர்த்து எடுக்கலாம். இங்க டாலர் ஷாப்ல கிடைக்கும். கட்டுறது - நூலால கட்டிருங்க. கம்டேப்.... பச்சை க்ரேப் பேப்பர் 1 செ.மீ அளவு நாடாவாக வெட்டி சுற்றலாம்.

‍- இமா க்றிஸ்

இமா நான் ஷாஹிதா. உங்க raafiya flower நல்லா இருக்கு
craft classes konjam solla mudiiyumaa? நான் கூடுவாஞ்சேரியில் இருக்கின்றேன் . நான் செயற்க்கை பூச்செண்டு செய்தால் finishing சரியா வரல டிப்ஸ் ஏதாவதுசொல்ல முடியுமா?

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

இப்போதான் உங்கள் கேள்வி பார்க்கக் கிடைத்தது ஷாஹிதா. ;) இதற்குள் கேள்வியைச் சரியான இழையில் போட்டுப் பதிலும் பெற்று இருப்பீர்கள்.
//செயற்க்கை பூச்செண்டு செய்தால் finishing சரியா வரல டிப்ஸ்// பொறுமையாகப் பண்ணிப் பாருங்க. திரும்பத் திரும்ப முயற்சி செய்யுங்க, எதுவும் பயிற்சியில மெதுவா வந்துரும்.

‍- இமா க்றிஸ்

very very beautiful flowers. I`ll try.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மிக்க நன்றி சீதா. செய்து பார்த்தீங்களா?

‍- இமா க்றிஸ்

வாவ் !!!! ராஃபியாவில் இவ்ளோ அழகான மலர்களா ..
எனக்கு palm ராபியா ..கார்டனில் கட்ட பயன்படுதுவங்களே அது கிடைக்கும் இதே போல் செய்து பார்கிறேன்

;) அதுதான் ஒரிஜினல் ராஃபியா ஏஞ்சல். இது செயற்கைதான்.

‍- இமா க்றிஸ்