சுலப ரசம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மிளகாய்வற்றல் - ஒன்று
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
புளி - விழுது சிறிதளவு
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு


 

மிளகு, மிளகாய்வற்றல், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு புளி விழுது, மஞ்சள் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை நீரில் கலந்து, திட்டமாகக் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
அதன் பிறகு கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி, கொதித்து, நுரைத்ததும் இறக்கவும்.


இது தினப்படியாக தமிழ் நாட்டில் எல்லா வீடுகளிலும் பருப்பு வேக வைக்காத அன்று செய்யப்படுவது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்படியே சூப் மாதிரி குடிக்க நல்லா இருக்கு.

it was very easy to prepare and nice

****************************************************
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! கடவுள் நல்லவங்கள சோதிப்பார் , ஆனா கைவிட்டுட மாட்டார்
****************************************************
மிகவும் எளிதா இருக்கே...என்னை மாதிரி பேச்சிலருக்கு , அதுவும் வெளி நாட்டில் வாழும் என்னை போன்ற சைவ ஆசாமிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி! நன்றி!
ஷங்கர்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! கடவுள் நல்லவங்கள சோதிப்பார் , ஆனா கைவிட்டுட மாட்டார்