அவல் கஞ்சி எப்படி செய்வது

அவல் கஞ்சி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் தோழிகளே, நான் அருசுவையில் தேடிபார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. தயவு செய்து உதவுங்கல் தோழிகளே ...................

தோழிகளே பதில் தாருங்கள் ப்ளீஸ்.......

கொஞ்சமா(2 கைப்பிடி) அவல் எடுத்துக்கோங்க. சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தண்ணீர் இல்லாமல் பிழிஞ்சு எடுங்க.

1/2 லிட்டர் பாலை நல்லா காய்ச்சிடுங்க. அதுல அவலை போட்டு நல்லா கொதிக்க வையுங்க. அவல் வெந்ததும் உப்பு, சீனி, ஏலக்காய் பொடி சேருங்க. தேவைபட்டா இன்னும் கொஞ்சம் கூட தண்ணீர் சேருங்க. இது தான் அவல் கஞ்சி. ஏலக்காய் பால் வாசனை வராம இருக்க போடுவது. முதலிலேயே சீனி போட்டா வேக லேட் ஆகும். அது போல் முதலிலேயே உப்பு சேர்த்தாலும் பால் திரிந்து போக வாய்ப்புண்டு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்