மசித்த பருப்பு (குழந்தைகளுக்கு)

தேதி: October 19, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பாசிப்பருப்பு - 1/4 கப்
2. வெல்லம் - 4 தேக்கரண்டி
3. பசும்பால் (அ) தேங்காய் பால் - 1/4 கப்
4. நெய் - 2 தேக்கரண்டி


 

பாசிப்பருப்பை சுத்தம் செய்து நீர் விட்டு குழைய வேக வைத்து மசிக்கவும்.
வெல்லம் நீரில் கரைத்து வடிகட்டி பருப்புடன் சேர்த்து அடுப்பில் வைத்து கலக்கவும்.
நன்றாக கலந்து வரும்போது பால் சேர்த்து கொதி வரும்போது நெய் சேர்த்து எடுக்கவும்.


பாயாசம் போல் இனிப்பாகவும், செய்ய சுலபமாகவும் இருக்கும். வெல்லம் சேர்வதால் குழந்தைக்கு இரும்பு சத்து கிடைக்கும். எப்போது ஒரே போல் கஞ்சி, பருப்பு சாதம், தயிர் சாதம் செய்யாமல் இது போல் மாற்றி செய்தால் குழந்தைகளுக்கும் பிடிக்கும், உணவில் பருப்பும் சேரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மசித்த பருப்பு பாயசம் போலன்னா இருக்கு.

கோமு... நீங்களும் மாமி ஆயிட்டீங்களா???!!! :) பாயசம் போல் தான் செய்முறை ('Note:'லயே சொல்லிட்டனே), ஆனால் சுலபம், பதம் பார்க்க வேணாம், ரொம்ப கொதிக்க வேண்டாம். சுவையும் கொஞ்சம் வித்தியாசப்படும். நானும் சாப்பிடுவேன் இது போல் செய்யும்போது. பாயாசம் செய்தா பருப்பு வாசம் ரொம்ப இருக்காது, இதுல கொஞ்சம் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,
நல்ல ஐடியா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... கொஞ்ச நாளா பார்க்கலயே உங்களை??? நலமா? செய்து பாருங்க 10 நிமிஷ வேலை, சாப்பிட நல்லா இருக்கும் குழந்தைகளுக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா