pls help me......

i have irregular peried..... i took clomid(3). then i got pregnant. but i had miscarage in 11 weeks. then i am trying to get opregnant for 1.5 yrs. i haven't got pregnant yet untill now....i don't know why>>> dr recemend to laproscopy to check tupe evering........anyone know any iformation or any experiences about this.. i would like to say, after miscarage 1 week later, we did intecause. thatswhy do i have any infection?????? pls anyone had experiences,, tell me...

முதலில் இது ஒரு பொது தளம். அதுவும் முழுக்க முழுக்க தமிழ். அதில் நீங்க உங்களுடைய அந்தரங்கத்தை சொல்லுவதே ........ அதுவும் ஆங்கிலத்தில்.....சுத்தம்.
அதான் மருத்துவரிடம் கன்சல்ட் பண்றீங்க தானே......அப்புறம் என்ன???? எதுவாக இருந்தாலும் மன்றத்தில் உள்ள பழைய இழையை தேடி பாருங்கள்...

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க நல்ல டாக்டரை அணுகவும். அவர்களே இதற்கு தீர்வு சொல்ல முடியும்

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹலோ vr scorp இங்கு வருபவர்கள் எல்லோரையும் தோழிகளாக நினைத்துதான் தன் துன்பத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அது தவறாக இருந்தால் பொறுமையுடன் எடுத்து கூறலாம் ஏன் இப்படி கோபம் கொள்கிறீர்கள். அவர்க தளத்திற்கு புதிதாக இருக்களம். ப்ளீஸ் பா யாரையும் புண் படுத்தாதீர்கள்.
அதான் டாக்டர்கிட்ட கன்சல்ட் பன்றீங்கள அப்புறம் என்ன? இப்படி பதில் அளிக்கலாமா? நீங்களெ யோசீங்க பா.

ஆமாம் பாவம்...ரொம்ப மனவருதத்தில் கேட்டிருப்பாங்க..நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது என்னதான் தெரிந்தாலும் நாலு பேரிடம் கேட்கையில் அவங்க தரும் பதில் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..அம்முறையில் கேட்டிருக்கலாம்.
என்னை பொறுத்தவரை எல்லாத்தையுமே அந்தரங்கம் என்று தள்ளிவிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன்.மருத்துவரிடம் கூட சிலதை கேட்க கூச்சப்படுவோம் தானே ஆனால் ஊர்பேர்தெரியாதவர்களிடம் கேட்கலாம் என்று நினைப்பார்கள்..
அதுக்காக ஒரேடியா பச்சபச்சையா கேட்காமல் மனதை குழப்பும் சில சந்தேகங்களை நம்மால் முடிந்தால் தீர்த்து வைப்பதில் தப்பில்லைன்னு தோனுது.

அப்றம் லதாயினி நீங்க கேட்ட கேள்வியும் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு.முடிந்தால் தமிழில் கேளுங்களேன்..ரொம்ப குழம்பிக்காதீங்க இப்படியோ அப்படியோன்னு...மருத்துவம் ரொம்ப வளந்துடுச்சு...1.5 வருஷம் தானே பொறுமையா இருங்க..மருத்துவர் சொன்னபடி மருந்து எடுத்துட்டு டெஸ்ட் எல்லாம் தவறாம பன்னிக்குங்க.
சில அந்தரங்கமான கேள்விகளை டாக்டரிடம் கேட்க தயங்கவே கூடாது..நீங்கள் உங்க தோழிகளிடமும் மற்றவர்களிடமும் கேட்டால் பல மாதிரியான தவறான கருத்துக்கள் கூட சொல்வார்கள்.

ஆமாம் மன்றத்தில் தேடுங்கன்னு எல்லாருமே அடிக்கடி சொல்றீங்க..எனக்கும் என்ன தேடினாலும் கிடைப்பதே இல்லையே..எனக்கு தான் தேடுதல் வேலை செய்ய மாட்டேங்குதா உங்களுக்கெல்லாம் சரியா தான் வருதா?

தளிகா

ஒவ்வொன்னா தேட சொல்றாங்க. அது தான் நம்மளுக்கு பிடிக்காத (சோம்பேறி தனம் தான்) விஷயமாச்சே :)

அதுக்காக தான் கேள்விக்கு ஏத்த தலைப்பு போட சொல்லிட்டு இருக்கேன். இங்கே ஆரம்பமே கொஞ்சம் குளறுபடியா இருந்ததால் பதிவு போடல.

பாத்தாங்கன்னா நல்லபுள்ளையா மாத்திடுவாங்கன்னு நெனைக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் பிரண்ட்ஸ்,

vr scrop சொல்லுவது சரியே. இங்கு யாரும் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லமுடியாது. டாக்டரிடம் செல்லுவது மட்டும்தான் தீர்வு. அதை அவர்கள் ஏற்கனவே செய்கிறார். எனவே அதை பற்றி இங்கே கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

தளிகா இன்னும் தேடுக பாக்ஸ் வேலை செய்யவில்லை. ஆனா அந்தந்த தலைப்பில் தேடலாம் இல்லையா அதைத்தான் சொல்றாங்க. அதான் தலைப்பையும் பொருத்தமா கொடுங்கன்னு சொல்றாங்க. ஒரே விஷயத்தைப் பேசும் பல இழைகள் இருக்குதே. பதிலளித்த கேள்விகளுக்கே மீண்டும் மீண்டும் கேள்விகள் வரும் போது பதிலளிப்பவர்களுக்கு சலிப்பு தட்டி விடுது இல்லையா. pcod பற்றி ஏற்கெனவே பல இழைகளில் விளக்கமா பேசிய பின்னாடியும் அதேபோல மீண்டும் மீண்டும் கேள்விகள் வருது. இவங்க கூட தலைப்பை இதுக்கு தகுந்த படி மாற்றினா பின்னாடி தேடிப்பார்க்கும் போது ஈசியா இருக்கும் இல்லையா?

எனக்கும் இவங்க மருத்துவர் ஆலோசனை கேட்பதே நல்லதுன்னு தோணுது. இதற்கெல்லாம் அனுபவத்தில் பதி சொல்வது கஷ்டம். ஏன்னா ஒவ்வொருவர் உடல் வாகும் பிரச்சினைகளும் வேறுமாதிரி இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

sree_01ஆமாம் பா அவர்களின் கேள்விக்கு மருத்துவர்தான் பதில் சொல்லமுடியும். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவர்கள் குழப்பத்தை இங்கே கேட்கிறார்கள் எதனால் நாம் அனைவரும் தோழிகள் என்று தானே தோழிக்களுக்குள் ஏன் பா கோபம். அவரே மனகஷ்டத்தில் உள்ளார். ஏன் அவரை மேலும் காயப்படுத்த வேண்டும். சொல்லுங்கள். சாப்டாக பதில் கூறலாம் இல்லையா?

மேலும் சில பதிவுகள்