கொத்தமல்லி சாதம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

அரிசி (மெல்லிய ரகம்) - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
விழுதாக அரைக்க:
சுத்தம் செய்து நறுக்கின மல்லித் தழை - 2 கப்
பச்சை மிளகாய் - 5,6 ( ருசிக்குத் தக்க)
புளி- சுண்டைக்காய் அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக் கரண்டி
அலங்கரிக்க:
வறுத்த வேர்க்கடலை- கால் கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு


 

சாதத்தைப் பொலபொலவென்று வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
மேலே அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, விழுதை பச்சை வாசனை போக கிளறவும்.
பிறகு அதை ஆறின சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
வறுத்த வேர்க்கடலையும் தேங்காய் துருவலும் மேலே தூவி அலங்கரிக்கவும்.
கண்கவர் அழகிய பச்சை நிறத்தில், சிவப்பு வேர்க்கடலை, வெள்ளை நிறத்தேங்காய் துருவலுடன் பார்க்க மிக அழகாகவும், உண்ண மிக ருசியாகவும் இருக்கும்.
குறிப்பு: உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி, துணியில் பரப்பி வைத்து தாளிக்கும் போது வறுத்தால், மிகக் கரகரப்பாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா இதை புதினா போட்டு செய்து பார்தேன்.. ரொம்ப டேஷ்டா இருந்தது..பார்கவே கிரின்,பிரவுன்,வொய்ட் என்று ரொம்ப கலர்புல்லா இருந்தது...ரொம்ப நன்றி....

சித்ரா, உங்க கொத்தமல்லி சாதம் இன்று செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
அந்த உளுத்தம் பருப்பு குறிப்புக்கும் நன்றி, மிகவும் நன்றாக இருந்தது.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சித்ரா விஸ்வநாதன்,'அறுசுவை குறிப்பில் சமையல் 'மனோகரி மேடம் பதிவில் பார்த்து உங்கள் குறிப்பு கிடைத்தது.இன்று கொத்தமல்லி சாதம் செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.மேன்மேலும் உங்கள் குறிப்புகளின் எண்ணிக்கை வளர வாழ்த்துக்கள்

ஹை சித்ரா அவர்களே நான் இன்று கொத்தமல்லி சாதம் செய்தேன் மிக நன்றாக இருத்தது.கடலைக்கு பதில் cashew போட்டேன்.
we want more dishes from u.thanx.

சித்ரா மேடம்,

உங்க குறிப்பின் படி பாஸ்மதி அரிசி கொண்டு, சென்சு பார்த்தேன். ரொம்ப சுலபமாகவும், சூப்பராகவும், இருந்தது:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சித்ரா மேடம்,

நான் இன்று கொத்தமல்லி சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தேன் மிகவும் அருமை.கணவருக்கும் பிடித்திருந்தது. நன்றி

சித்ரா அவர்களுக்கு,

இன்று கொத்தமல்லி சாதம் செய்தேன் மிகவும் சுவையாக வந்தது முந்திரி பருப்பு உபயோகித்தேன். என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி உங்களுக்கு.

அன்புடன்
அபிராஜன்

அன்பு சகோதரி சித்ரா அவர்களுக்கு தங்களின் கொத்தமல்லி சாதத்தை செய்து பார்த்தேன், மிகவும் சுவையாக இருந்தது. நான்வெஜ் அயிட்டங்களுக்கு பொருத்தமாகவும், சுலபமாகவும் செய்யக்கூடியதாக இருந்தது. இந்த சுவையான குறிப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி.

அன்புள்ள சித்ரா
கொத்தமல்லி சாதம் செய்தேன்.சுவையாக இருந்தது.

செய்து முடிந்தவுடன்
இந்த பாட்டை முனுமுனுத்துக்கிட்டே இருந்தேன்.

மிகவும் நன்றி.

சித்திரா, சிவப்பு பச்சை அரிசியில் சமைத்தேன் ¨

கொத்தமல்லி சாதம் மிகவும் அருமை.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.