மணிகளாலான மயில் வடிவம்

தேதி: October 20, 2010

4
Average: 3.9 (25 votes)

 

ஸ்பூன் வடிவில் உள்ள ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 15
அட்டை
கோல்டுநிற சம்கி
பொடிமணிகள் - வைலெட், ரோஸ், மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளைநிறம்
கருப்புநிற வெல்வெட் துணி அல்லது பேப்பர்
சிவப்புநிற வெல்வெட் துணி
பெவிக்கால்
ஸ்டோன்
கத்தரிக்கோல்
சிறிய அளவுள்ள வட்டவடிவ முத்துமணி - ஒன்று
தெர்மாக்கோல்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 2
நரம்பு ஒயர்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு ஐஸ்க்ரீம் ஸ்டிக்கின் மேல் முனையிலிருந்து கால் இன்ச் இடைவெளிவிட்டு அதன் நடுவில் ஒன்பது கோல்டுநிற சம்கியை வரிசையாக ஒட்டவும்.
ஸ்பூன் முனையின் ஓரத்தில் முதலில் வைலெட் நிற மணிகளை வரிசையாக ஒட்டவும். அடுத்த வரிசை ரோஸ்நிற மணியை ஒட்டவும். மீதமுள்ள இடைவெளியில் மஞ்சள்நிற மணிகளை ஒட்டவும். ஸ்பூனின் ஓவல் வட்டத்திற்குள்ளே இந்த மணிகளை ஒட்டி முடித்துவிடவும்.
இந்த மணிக்களுக்கு கீழ் சம்கி ஒட்டிய இடம் வரை இருப்புறங்களில் வெள்ளைமணிகளை ஒட்டவும்.
இதுப்போன்று மொத்தம் 15 ஐஸ்க்ரீம் ஸ்பூனில் மணிகளும், சம்கியும் ஒட்டி எடுத்துக் கொள்ளவும்.
30 செ.மீ நீளமும், 20 செ.மீ அகலமும் கொண்ட அட்டையில் கருப்புநிற வெல்வெட் துணியை ஒட்டி காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இந்த அட்டையில் மணிகள் ஒட்டிய 15 ஸ்பூனையும் படத்தில் உள்ளது போல் இடைவெளி விட்டு பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
அதன் நடுவில் மயில் தலையுடன் கூடிய உடலமைப்பை சாக்ப்பீஸ்ஸால் வரைந்து கொள்ளவும். அந்த இடத்தில் பெவிக்கால் தடவி உல்லன் நூலை அதன் வடிவம் போன்று ஒட்டிக் கொள்ளவும்.
உல்லன் ஒட்டிய இடத்தில் அதன் தலைப்பகுதியில் அரை இன்ச் அளவு வைலெட்நிற மணிகளை ஒட்டவும். பின் ஒட்டிய இடத்திலிருந்து இரு ஒரங்களிலும் வைலெட்நிற மணியை இரண்டு வரிசை வரும்படி ஒட்டிக் கொள்ளவும். மீதமுள்ள இடைவெளி முழுவதும் நீலநிற மணியை ஒட்டவும்.
பிறகு ஸ்பூனில் வளைவுக்கு தகுந்தாற்போல் அட்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு ஐஸ்க்ரீம் நடுவிலும் பூ வடிவில் உள்ள ஸ்டோனை ஒட்டிக்கொள்ளவும். மயில் உடலமைப்பிலிருந்து ஐஸ்க்ரீம் குச்சி ஒட்டிய இடைவெளி வரைக்கும் வெள்ளைநிற மணிக்களை ஒட்டவும். பிறகு மணியும், ஸ்டோனையும் ஒட்டிய இடைவெளியில் ஒரு வரிசை மட்டும் வைலெட் நிற மணிகளை கொண்டு வரிசையாக ஒட்டிக் கொள்ளவும். கண்ணுக்கு முத்துமணியை ஒட்டவும். மூக்குக்கு சிவப்பு வெல்வெட் துணியை மயில் மூக்கு போல் வெட்டி ஒட்டிக் கொள்ளவும்.
மணிகள் நன்றாக ஒட்டிக் கொண்டதும் அட்டையை திருப்பி வைத்து அட்டையின் நீளத்திற்குகேற்ப தெர்மாக்கோலை வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த நீளத்தின் அளவைவிட நான்கு செ.மீ குறைவாக மற்றொரு தெர்மாக்கோலை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த தெர்மாக்கோலை ஒன்றன்மேல் ஒன்று ஒட்டி அட்டையின் பின்புறத்தில் அடியில் ஒட்டி விடவும். நடு ஐஸ்க்ரீம் குச்சியின் ஒவல் வடிவத்தில் நரம்பு ஒயரை விட்டு பின்பக்கமாக கொண்டு வந்து இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை சேர்த்து அதனுடன் இந்த நரம்பை சுற்றி நன்கு இறுக்கமாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். கொள்ளவும். பின்னர் இதனை தெர்மாக்கோலில் நடுவில் நன்கு அழுத்தி சொருகி விடவும். (கட்டிய நரம்பு தளர்வாக இருந்தால் (மயில்) ஸ்டாண்ட் போல் நிற்காது)
மணிகளால் ஆன அழகிய மயில் ரெடி. ஸ்டாண்ட்க்கு பதிலாக மயிலை ப்ரேம் போட்டுக் கொள்ளலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த மயில் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் செண்பகா,
மயில் மிக அழகு ....ஆனா நவீனா மயிலை விட அழகு ...வாழ்த்துக்கள்

nanriyudan

ரொம்ப பொருமையா அழகா செய்து காட்டி இருக்கீங்க.... மேலே செய்து காட்டி இருக்க மயிலும் அழகு, கீழே படத்தில் இருக்கும் மயில்களும் அழகு ;) குட்டி கொஞ்சம் வெயிட் குறஞ்சுட்டா போலிருக்கே செண்பகா.... அவ உடம்பை இன்னும் தேத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்யூட் மயிலோட சிரிப்பு கொள்ளை அழகு;)

மயில் செய்முறையும் அழகா இருக்கு;)

Don't Worry Be Happy.

சென்பகா, நவினா சூப்பரா இருக்கிங்க. என்ன 2 பேருமே சரியா சாப்பிடுவதில்லையா. ஒரே டயட்டிங்ஙா? உடம்பை தேத்துங்க நிங்களும், குட்டியும்.

குட்டிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

செண்பகாவின் கைவண்ணத்தைப் பற்றி கேட்க வேண்டுமா! ரொம்ப அழகா இருக்கு.

இந்த மயிலை விட நவீனாக் குட்டிதான் ரொம்ப அழகு. சுத்திப் போடுங்க குட்டிம்மாவுக்கு!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

your peacock is very nice.

அற்புதமாக இருக்கு.......இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தாங்க பொறுமை......ஒரு வயது குழந்தையை வைத்து கொண்டு.....எப்படி உங்களால் மட்டும் எதெல்லாம் செய்ய முடிகிறது.....வாழ்த்துக்கள்.....ஒரு சந்தேகம் அந்த துரு துரு குட்டியை எப்படி சமர்த்தா வைத்து ஒரு போட்டோ எடுக்க முடிந்தது....கொள்ளை அழகு...

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மயில் சுப்பர் செண்பகா. எனக்கு உட்கார்ந்து இத்தனை மணிகள் ஒட்டும் அளவு பொறுமை இல்லை.

புதுப்படம் நல்லா இருக்கு. ஹாய் நவீனாக்குட்டி!
(அடுத்த படத்துக்கு ஒரு சஜஷன் சொல்லட்டா?) ;)))

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு, இமா சொன்ன மாதிரி பொறுமை இல்லை. ஆனா நீங்க அழகா பண்ணிருக்கீங்க. நீங்களும் கொஞ்சம் வெயிட் குறைந்த மாதிரி தான் இருக்கீங்க, பழைய படங்களுடன் ஒப்பிடும் போது,

பாபு அண்ணா, எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டா எப்பூடி, கொஞ்சம் ரெண்டு பேருக்கும் கொடுங்க.

அன்புடன்
பவித்ரா

செண்பகா
ரொமப அழகா பொறுமையா பண்ணிருக்கீங்க. அதான் ரொம்ப அழகா வந்திருக்கு. ஆனா மயில விட குட்டி தான் ரொம்ப ரொம்ப அழகா சிரிச்சுக்கிட்டே இருக்காங்க. ஒருவழியா பழைய போட்டோவ எடுத்தீங்களே... ஆனா பழையபோட்டோல செண்பகா மட்டும் தான் சிரிச்சுட்டு இருந்தாங்க. இப்ப பக்கத்துல ஒரு பூவும் சிரிக்குது.
குட்டிக்கு வர்ற சனிக்கிழமை பிறந்த நாள் தானே.. ஒரே பிசியா இருப்பீங்க அண்ணாவும் நீங்களும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் குட்டிக்கு.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//பாபு அண்ணா, எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டா எப்பூடி// ;))) மாட்டிட்டாங்க. ;))

‍- இமா க்றிஸ்

how r u

god is love

என்னை பவீ’னு கூப்பிடும் போதே நீங்க தான்னு நினைத்தேன்

அன்புடன்
பவித்ரா

மயில் தோகை அழகு, அதை விட பொறுமையா செய்தது அழகு,, இன்னும் இருவர் சிரிப்பும் அழகு, ஆனால் என்ன ஆச்சு அம்மாவும் பொண்ணும் சேர்ந்து டயட்டிங்கா?

ஜலீலா

Jaleelakamal

உங்ககூட இப்பதான் முதல்முறையா பேசரேன். உங்க கை வண்ணத்தில் மயில் தோகைவிரித்து அழகாக இருக்கு. நீங்களும் குழந்தையும் கூட கொள்ளை அழகு.

நான் இதைப் பார்க்கவே இல்லையே!! (ஜெமாமி சொன்னதுக்கு தாங்ஸ்)
செண்பகா தான் ரொம்ப இளைச்சுட்டாங்க போல.. குட்டி ரொம்ப வேலை வைக்கிறாளா?.நீங்க செய்த மயில் வடிவத்தை விட உங்க கைகளில் இருக்கும் மயில் ரொம்ப அழகு.... :)

மூனு மயிலுமே அழகுதான்.

செண்பகா,
அழகா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

this design is very nice@ super. then how to make anklets modeles.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta