புடலங்காய் வறுவல்

தேதி: October 21, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

புடலங்காய் - 250 g
கடலை பருப்பு - 50 g
சிறிய வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1/2 tsp
இஞ்சி- 1 அங்குல துண்டு
பூண்டு - 4
தேங்காய் துருவல் - 2 tbsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கடுகு, கருவேப்பிலை - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

புடலங்காயை கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். 10 நிமிடம் சென்ற பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஊற்றி விட்டு ஒரு அலசி வைக்கவும். இப்படி செய்வதால் புடலங்காயில் சிலசமயம் உள்ள கசப்பு தன்மை இருக்காது.
வெங்காயம், மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, தேங்காய் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.
கடலை பருப்பை ஊறவைத்து முக்கால் பாகம் வேக வைத்து எடுக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு புடலங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைக்கவும்.
புடலங்காய் முக்கால் பாகம் வெந்த பிறகு தீயை மிதமாக்கி சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரட்டவும்.
புடலங்காய் ஓரளவு வறுபட்டவுடன் கடலை பருப்பு சேர்த்து கிளறவும்.
மேலும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.
சுவையான புடலங்காய் வறுவல் தயார். சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

புடலங்காயில் வித்யாசமான ஒரு ரெசிப்பி. செய்துபாக்கரேன்மா.

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. செய்து பார்த்துவிட்டு கட்டாயம் சொல்லவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!