கோதுமை சாலட் சமையல் குறிப்பு - 16774 | அறுசுவை


கோதுமை சாலட்

food image
வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : Sat, 23/10/2010 - 09:36
ஆயத்த நேரம் : 45 நிமிடம்
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 3

 

  • முழு கோதுமை - 1 கப்
  • வெங்காயம் - 1
  • சிகப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் - 1
  • காரட் - 1
  • வெங்காய தாழ் - 3
  • எலுமிச்சை சாறு - 3tsp
  • ஆலிவ் எண்ணெய் - 6 tsp
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகு தூள் - காரத்திற்கேற்ப

 

  • கோதுமையை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து மீதமான தீயில் வேக வில்லா வேண்டும். இது வேக குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும்.
  • வெந்தபின் மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி கோதுமையை ஒரு பெரிய பௌலில் கொட்டவும்.
  • வெங்காயம், குடை மிளகாய் மற்றும் வெங்காய தாழை பொடியாக அறிந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை இரண்டு ஸ்பூன் எண்ணையில் நிறம் மாறாமல் வதக்கி எடுத்து கொள்ளவும்.
  • கோதுமையுடன் ஆலிவ் எண்ணெய், வதக்கிய வெங்காயம், குடை மிளகாய், வெங்காய தாழ், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு அரை மணி நேரம் விடவும்.
  • இப்பொழுது சுவையான சாலட் ரெடி.





Very nice

romba arumaiyaga irrunthathu, aanal naan thalikum polzuthu kaduhu, milahu serthu thalithen. melum mixer serthu parimarinen.

thanks for your receipe...