தேதி: October 25, 2010
பரிமாறும் அளவு: 2 நபர்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமைமாவு - 1 1/2 கப்
நேந்திரம் பழம் கனிந்தது - ஒன்று
பேரிச்சம்பழம் - 4
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க
நேந்திரம் பழம், பேரிச்சம் பழம் இரண்டையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
கோதுமை மாவில் பழம், பேரிச்சை அரைத்தகலவை, வெல்லம், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும். தண்ணீர் தேவையெனில் சேர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு வட்டமாக தேய்த்து எண்ணெய் சட்டியில் பொரித்து எடுக்கவும்.
சிறுவர்கள் விரும்பும் சுவையான நேந்திரம் பழ பூரி தயார்.
அதிக அளவு இரும்பு சத்துள்ள உணவு. குழந்தைகளுக்கு கொடுப்பதானால் சூடான நீரில் ஊற வைத்துக் கொடுக்கவும்.
Comments
நேந்திரம் பழ பூரி
சத்தான குறிப்பு கொடுத்துருக்கீங்க ஜெயா!!
நேந்திரம்பழம் கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு சொல்றேன் மா!
வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா
ம்ம் சீக்கிரம் வாங்கி செஞ்சுபாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லு குட்டி;)
ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Don't Worry Be Happy.
ஜெயா
ஜெயா,
நல்ல சுவையான,சத்தான குறிப்பு
நேந்திரம் பழம் பதில் வாழை பழம் உபோயோகிக்கலமா?
எனக்கு இதெல்லாம் கிட்டாது பா :-((
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
ம்ம் வாழைப்பழம் உபயோகப்படுத்தலாம்னு நினைக்கிறேன். இன்னும் நான் அந்த மாதிரி பண்ணினது இல்ல. என் பையன் நேந்திரம் பழமா கொடுத்தா சாப்பிடமாட்டான். அதுக்காக அத வேற உருவில் மாற்றம் பண்ணிக்கொடுத்ததுதான் இது. மேலும் நேந்திரம்பழத்தோட வாசனை ரொம்ப நல்லாயிருக்கும்.
நீங்க வாழைப்பழத்தில ட்ரை பண்ணிப்பாருங்கபா. நல்ல அயர்ன் சத்து உள்ளது.
எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க, ஊக்கத்திற்கு மிக்க நன்றி;)
Don't Worry Be Happy.