கெர்பெரா (Gerbera) ஃப்ளவர்

தேதி: October 26, 2010

5
Average: 4.1 (11 votes)

 

பூவின் நடுப்பாகத்திற்கு டியூப்லக்ஸ் காகிதம் - மஞ்சள் அல்லது ப்ரவுன் நிறம்
இதழுக்கு - சிவப்பு, வெள்ளை அல்லது ரோஸ் நிறம்
காம்புக்கு - பச்சைநிறம்
பச்சைநிற கம் டேப்
கோல்டுநிற கம்பி - 20 செ.மீ
வெள்ளைநிற நூல்
பஞ்சு
பெவிக்கால்
கத்தரிக்கோல்

 

கெர்பெரா ஃப்ளவர் செய்ய முதலில் மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
இதழுக்கு விரும்பிய நிறங்களை தேர்ந்தெடுத்து, அதனை 10 செ.மீ நீளம் X 6.5 செ.மீ அகலம் என்ற அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதில் கீழிலிருந்து ஒரு செ.மீ அகலம் விட்டு மீதியுள்ள 5.25 செ.மீ அகலம் X 10 செ.மீ நீளத்தில் 16 இதழ்களை நறுக்கிக் கொள்ளவும். இதழ்கள் ஒரே அளவில் இருக்க வேண்டும். மற்றொரு பேப்பரை இதுப்போல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பச்சைநிற டியூப்லக்ஸ் காகிதத்தை 6.5 செ.மீ நீளம் X 5 செ.மீ அகலம் இந்த அளவை பூவின் காம்பு பகுதிக்கு எடுத்துக் கொள்ளவும். இதில் 5 செ.மீ அகலப்பகுதியை மட்டும் ஜிக்ஜாக் வடிவில் நறுக்கி வைக்கவும்.
பூவின் நடுப்பகுதிக்கு மஞ்சள் நிற காகிதத்தை 10 செ.மீ X 7 செ.மீ என்ற அளவும், மேலும் 8 செ.மீ X 6 செ.மீ என்ற அளவில் மற்றொரு துண்டும் நறுக்கி வைக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு மஞ்சள்நிற காகிதத்தையும் இரண்டாக மடித்து ஒரு செ.மீ அகலம் விட்டு மீதியுள்ள அகலத்தை 1/4 செ.மீ அளவுகளில் வரிசையாக நறுக்கி வைக்கவும்.
முதலில் 8 செ.மீ நீளத்தில் நறுக்கி வைத்திருக்கும் மஞ்சள்நிற காகிதத்தை மெதுவாக சுருட்டி கடைசியில் பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும். அதன் மேல் 10 செ.மீ நீளத்தில் உள்ள மஞ்சள் நிற காகிதத்தை வைத்து சுருட்டி பெவிக்கால் தடவி ஒட்டவும். பின்னர் இரண்டையும் நன்றாக பிடித்து கொண்டு கத்தரிக்கோலால் சின்ன சின்ன இதழ் போல் நறுக்கிய இடத்தில் வெள்ளைநிற நூலை வைத்து நன்கு இறுக்கமாக கட்டி முடிச்சு போட்டுக் கொள்ளவும். இப்போது பூவின் மொட்டு பகுதி தயார்.
இப்பொழுது மஞ்சள்நிற மொட்டு பகுதி நடுவில் இருப்பது போன்றும், அதன் அடியில் சிவப்பு நிற இதழ்களை வைத்து அப்படியே சுருட்டி கொண்டு வந்து கடைசியில் பெவிக்கால் வைத்து ஒட்டவும். கவனமாக 16 இதழும் தனித்தனியாக இருப்பது போல் பிரித்து வைக்கவும்.
மற்றொரு 16 இதழையும் அதன் மேல் வைத்து சுருட்டி ஒட்டவும்.
20 செ.மீ கம்பியை 2 செ.மீ அளவில் கொக்கி போல் வளைத்து அதனை மொட்டின் நடுப்பகுதியின் வழியாக விடவும்.
பின்னர் பூவின் அடியிலிருந்து தேவையான அளவு காம்பு பகுதி கிடைக்கும் அளவிற்கு கம்பியில் பஞ்சை நன்கு அழுத்தி சுற்றி கொள்ளவும். பிறகு அதன் மேல் பச்சைநிற கம் டேப்பை சுற்றவும்.
கடைசியில் காம்பு பகுதிக்காக நறுக்கி வைத்துள்ள பச்சைநிற பேப்பரை கம் டேப் மேல் சுற்றி ஒட்டிக் கொள்ளவும்.
அழகான எளிமையான கெர்பெரா ஃப்ளவர் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த கெர்பெரா ஃப்ளவர் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகான செய்முறை!
அசத்தலான சிரிப்பு;-)
வாழ்த்துக்கள்...

Don't Worry Be Happy.

பூ ரொம்ப அருமை அதை விட உங்க கையில் இருக்கும் பூ ரொம்ப அழகா இருக்கு குட்டீஸை சொன்னேன் வாழ்த்துக்கள்

ரொம்ப அழகா இருக்கு சென்பகா பாராட்டுக்கள்.

நல்லாய் அசத்துறீங்க. தொடர்ந்து தாருங்கள்.
இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வேலை நடுவுல, பார்ட்டிகள் நடுவுல ஒரு அழகான பூ செய்து காட்டிட்டீங்க செண்பகா. ;) அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

senbagababu என்று பார்த்தவுடனே, நேரா கடைசி ஸ்னேப் தான் பார்த்தேன். அப்புறம் தான் செய்முறை பார்த்தேன். மூன்று பூக்களுமே அழகு :))

அன்புடன்
பவித்ரா

மிகவும் நல்ல இருக்கு,,, உங்க கைவினை பூ வையே தோற்கடிக்க வைத்து விட்டது உங்கள் கையில் உள்ள பூ....கண்ணு படுபோச்சி குட்டி பூக்கு,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அழகா எளிமையான கைவேலை.

செய்து காமித்த செண்பகாவிற்கு நன்றிகள்

ஒரு சந்தேகம். பழைய போட்டோவில் இருக்கும் செண்பகா தானே இந்த செண்பகாவும். நானும் கண்ணை கசக்கி கசக்கி பார்த்துட்டேன் :) அடையாளமே தெரியல.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செண்பகா... எப்படிங்க உங்களால் மட்டும் முடியுது??? சூப்பரா இருக்கு போங்க. என்னை சும்மா இருக்க விடாம எதையாவது செய்து பார்க்க வைக்கிறதே வேலையா போச்சு அறுசுவைக்கு. இதையும் செய்து பார்க்க வேண்டிய லிஸ்ட்'ல சேர்த்துட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா,
உங்கள் புதிய ஃபோட்டோ நவீனா குட்டியுடன்,இங்கு மற்றும் முந்தைய கைவினைப்பகுதியிலும் பார்க்காமல் இருந்து இருந்தால்,பிறந்த நாள் விழா ஃபோட்டோவில் இருப்பது யார் என்று கேட்டு இருப்பேன்.பழைய ஃபோட்டோ சீமந்தத்தில் எடுத்ததோ?

வழக்கம் போல,உங்களின் இந்த படைப்பும் அழகு.பாராட்டுக்கள்.கைவினைப்பகுதி எல்லாம் பார்வையிடுவேன்.ஆனால் செய்ய தான் வராது.

ஜெய்லெஷ்மி
மெர்ஜானா
யோகராணி
இமா
பவித்ரா ராம்
விமலா கீதா
ஆமினா
வனிதா
ஹர்ஷா அனைவருக்கும் நன்றி.

senbagababu

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta