அரைக்கீரை பொரியல்

தேதி: October 27, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரைக்கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

மிளகு தூள் - 1 tsp

பூண்டு - 10 பல்

தேங்காய் துருவல் - 3 tsp

கடுகு, கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு


 

கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடுகு கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்பு கீரையை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரத்தில் கீரையில் உள்ள தண்ணீர் சுண்டியவுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.

கீரை வெந்தவுடன் அடுப்பை அனைத்து மிளகு தூள் மற்றும் தேங்காய் சேர்த்து கிளறவும்.


அரை கீரையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. குழந்தை பிரிந்த பிறகு இப்படி தான் செய்து தருவார்கள். இதை சாபிட்டால் பால் நன்றாக சுரக்கும். கீரையை (பச்சை காய்கறிகளை) எப்பொழுதும் மூடி போட்டு வேக விட கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு ...எனக்கு அரைக்கீரை ரொம்ப பிடிக்கும் .. அரைக்கீரையின் ஆங்கில பெயர் என்ன?? US கிடைக்குமா ?? நான் பார்த்ததில்லை அதனால் கேட்கிறேன்..

Friends make Life Beautiful !!!

அரைக்கீரைக்கு ஆங்கிலத்தில் எனக்கு என்னான்னு தெரியலை......இந்தியன் ஸ்டோரில் கிடைகிறது......நீங்கள் இந்தியா காஷ் அண்ட் காரி அல்லது கோகனட் ஹில் இதில் எதுலயாவது தேடி பாருங்கள்...

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!