சமொசா ஷீட்

சமொசா ஷீட் மீந்து விட்டது வேறு என்ன செய்யலாம்னு யாராவது idea குடுங்கப்பா

குட்டிக்குட்டி சதுரங்களாக அல்லது வட்டங்களா வெட்டி கப்கேப் மோல்ட்ல போட்டு பேக் செய்து வைத்தால் பின்னால பிடிச்ச ஃபில்லிங் வைச்சு சாப்பிடலாம். ப்ளைன்ட் பேக்கிங் (blind baking) என்பாங்க, பீன்ஸ் ஏதாவது வைத்து பேக் செய்து பாதி அளவு பேக் ஆனதும் பீன்ஸை எடுத்துவிட்டு பேக் செய்யவேண்டும். (பீன்ஸை ஆறவிட்டு பாட்டிலில் போட்டு வைத்தால் திரும்ப 'ப்ளைன்ட்' பேக்கிங் செய்யப் பயன்படுத்தலாம்.)

உண்மைலயே நீங்க எந்தவிதமான ஷீட் சொல்றீங்க என்று தெரியாமல் தான் சொல்கிறேன். பஃப் பேஸ்ட்ரி அல்லது ஃப்லேகி பேஸ்ட்ரி ஷீட்ஸ் என்றால் 'மினி பை'களாக பேக் செய்து ஃப்ரீஸ் பண்ணி வைத்து பிறகு அறை வெப்பநிலைக்குக் கொண்டுவந்து திரும்ப ஹீட் செய்து சாப்பிடலாம்.

அல்லது, 'பின்வீல் பீட்ஸா' (பேஸ்ட்ரி வீல்ஸ்) செய்யத் தயாராக ஃபில்லிங் வைத்து சுருட்டி, க்ளிங்ராப்பில் சுற்றி ஃப்ரீசரில் வைத்துவிடலாம். தேவைப்படும் போது ஒரு மணி நேரம் முன்னால் வெளியே எடுத்து சக்கரங்களாக வெட்டி பேக் செய்யலாம்.

மூங்கில் அல்லது பப்பாளிக் குழாய் அல்லது கோன் மோல்ட்டில் சுற்றி பொரித்து அல்லது பேக் செய்து காற்றுப் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்தாலும் பின்னால் தேவைக்கு ஏற்றமாதிரி ஃபில் செய்து பயன்படுத்தலாம்.

‍- இமா க்றிஸ்

நான் செய்து பார்க்கிரேன். அது pastry sheet என்று தான் நினைக்கின்ரேன்

சமோசா ஷீட்களை சின்ன சின்னதா மெல்லிய நீல்களாக கட் பன்னி அதில் சிக்கனை முட்டையில் முக்கி பிரட்டி பொரித்த ஒரு ரெசிபியை கண்டேன் ரொம்ப அழகா இருந்தது..மீந்து போனால் 1 வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சமோசா செய்து சாப்பிடலாமே.

சின்ன சின்ன சதுரங்களாக வெட்டி பொரித்து,சுகர் பவுடர் தூவி இனிப்பாக மாற்றலாம்.

ரீம் சொன்னது போல் பொரித்து பாட்டிலில் போட்டு, உப்பு மிளகாய்த்தூள் தூவிக் குலுக்கி வைத்துச் சாப்பிடலாம். ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்