பூசணிக்காய் மோர் குழம்பு

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன்- இரண்டு கப்
தேங்காய்ப்பூ - அரை கப்
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
தக்காளி - ஒன்று
சீரகம் - அரைத் தேக்கரண்டி
தாளிப்பதற்கு :
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

துவரம் பருப்பு, 3 மிளகாய் வற்றல், சீரகம் இவற்றை ஊற வைத்து, தக்காளி, தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பூசணிக்காய் துண்டங்களை சிறிய அளவு தண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அரைத்த விழுதினைப் போட்டு லேசாக கொதிக்கவிடவும்.
பிறகு மோரை ஊற்றி, பொங்கி வந்ததும் இறக்கி மீதமுள்ள உப்பை போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, 2 மிளகாய் வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.


நாம் வழக்கமாக செய்யும் மோர் குழம்புகளைச் சற்று வித்தியாசமாகவும் செய்யலாம். தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள், ஒரு கப் தேங்காய் எனும் இடத்தில் 2 மேசைக்கரண்டி தேங்காயும், மீதி துருவிய காரட்டும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல நிறத்துடனும், ருசியுடனும் இருக்கும் புளிக்காத தக்காளி ஒன்று அல்லது இரண்டு சேர்த்து, தேங்காயைக் குறைத்துக் கொண்டு அரைத்தாலும் நன்றாக இருக்கும். காரமும் புளிப்பும் அவரவர் தேவைக்கேற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும். குழம்பை இறக்கி வைத்த பிறகு உப்பைச் சேர்த்தால் மோர் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும் சில குறிப்புகள்