முட்டை சமோசா

தேதி: October 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சமோசா ஷீட் - 20
வெங்காயம் - 1 நறுக்கியது
காப்சிகம் - 1/4 துண்டு
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1/2 ஸ்பூன்
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்
சூரியகாந்தி எண்ணை - 2 கப்


 

முதலில் தேங்காய் எண்ணையில் குடைமிளகாயை வதக்கவும்..அதன் பின் அதில் வெங்காயத்தையும்,பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் அதிகம் வதங்க தேவையில்லை.பின்பு அதில் முட்டை மூன்றை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து ரொம்பவும் வரண்டு போகாமல் சிறிது ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு 1 நிமிடம் வதக்கவும்
பின்பு தீயை அணைத்து விட்டு குளிற விடவும்
அதன் பின் சமோசா ஷீட்களில் வைத்து சுருட்டி எண்ணையில் பொரித்தெடுத்து பரிமாறவும்


ஒரு முறை மீந்துபோன சமோசா ஷீட்டில் அதிகம் நேரம் செலவிட முடியாததால் இப்படி செய்தேன்..ஆனால் வீட்டில் உள்ளவர்களிடையே முட்டை சமோசா தான் அதிக ஹிட் ஆனது.முட்டையை அதிகம் வதக்க தேவையில்லை.அதன் பின் எண்ணையில் வறுக்கையில் முட்டையும் வேகும் லேசாக ஷீட்டுடன் ஒட்டியபடி இருக்கும்

இதனை ஸ்ப்ரிங் ரோல் பஃப்ஸ் ஷீட்களிலும் வைத்து செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்