இறால் கத்திரிக்காய் குழம்பு

தேதி: October 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

கத்திரிக்காய் - 4 (அ) 5
இறால் -100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயம், இஞ்சி, கத்திரிக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
தாளித்தவற்றுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் கத்திரிக்காய், இறால் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது, புளி கரைசலை ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா,
மீண்டும் உங்க குறிப்பு முகப்பில் பார்க்க சந்தோஷமா இருக்கு.விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,
வருகைக்கு,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு ஐட்டத்தை வைத்து தொக்கு.....பார்க்கவே நாக்கு ஊறுது......என் கணவர் சைவம்....அதனாலே கொஞ்சம் எனக்கு பார்சல் பண்ணிடுங்கோ....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆஹா....மிக அருமையான கலர்ஃபுல்லாக இருக்கு உங்கள் குறிப்பு.
நாங்களும் இப்படி தான் செய்வோம்.நல்ல டேஸ்ட்டான குறிப்புதான்.
வாழ்த்துக்கள் கவிதா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கவிதா உங்கள் குறிப்பை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கின்றது.நானும் உங்கள் முறைப்படிதான் செய்வேன்.

செய்முறையும்,விளக்கமும் தெளிவா இருக்கு.படங்களும் அழகு.வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கத்தரிக்காய் எவ்வளவு சேர்க்க வேண்டும் கவிதா?

‍- இமா க்றிஸ்

very good

very good

லாவண்யா,
ரொம்ப நன்றி கண்டிப்பாக அனுப்புறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

super

எனக்கு இன்னும் பதில் வரவில்லை. எப்படி சமைத்துப் பார்ப்பதாம்!!

‍- இமா க்றிஸ்

இமா மேடம்,

நலமா?

மிக தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் கத்தரிக்காய் 4 அல்லது 5 சேர்க்கலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

அப்சரா,யோகராணி மேடம்,சசி,லாவண்யா,

நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா. ;) அதை அறுசுவை டீமிடம் சொல்லி, மேலே 'தேவையானவை' லிஸ்ட்ல சேர்த்துருங்க.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்