மோர் சாம்பார்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நறுக்கின காய்கள் - ஒரு கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன் - 3 கப்
வெந்த பருப்பு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்- அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு:
தேங்காய்ப்பூ - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
தனியா - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து


 

சிறிது எண்ணெய்யில் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் வறுத்து கடைசியாக தேங்காயையும் சேர்த்து, ஒரு பிரட்டு பிரட்டி விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
காய்களை அரை கப் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.
வெந்ததும், அரைத்த விழுது, வெந்த பருப்பு முதலியவற்றை சேர்த்து, நன்றாக கொதித்ததும் மோரை ஊற்றி வேக விடவும்.
மோர் பொங்கி வந்ததும் இறக்கி உப்பைப் போட்டு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


சாம்பாருக்கு சேர்க்கும் கறிகாய்கள் அனைத்தும் சேர்த்து செய்யலாம். முக்கியமாக பூசணிக்காய், முருங்கை, கத்தரி நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்