கார வெங்காய மசாலா

தேதி: October 29, 2010

பரிமாறும் அளவு: 2 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பெரிய வெங்காயம் -- 5 என்னம் (நீளமாக அரிந்தது)
தக்காளி -- 3 என்னம் (பொடிதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
சாம்பார் தூள் -- 2 ஸ்பூன்
எண்ணைய் -- 4 ஸ்பூன்
தாளிக்க
-------
கடுகு
கறிவேப்பிலை


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து கிளறவும்.
நன்கு வதக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. தக்காளியில் உள்ள தண்ணீரே போதும்.
நன்கு வதங்கிய பின் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
தேவை என்றால் சிறிதளவு எண்ணைய் ஊற்றி கிளறவும்.
நன்கு வதங்கியதும் சாப்பிடத்தயார்.


சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
ஊருக்கு செல்லும் சமயங்களில் இதை செய்து கொண்டு போனால் கெட்டு போகாது.

மேலும் சில குறிப்புகள்