பிரண்டை வற்றல்

தேதி: October 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. அரிசி அ அரிசி நொய் - 400 கி
2. பிரண்டை - 1 கப்(பொடியாக நறுக்கியது)
3. காய்ந்த மிளகாய் - 3
4. பச்சை மிளகாய் - 2 அ 3
5. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
6. உப்பு - தேவைக்கு
7. பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
8. எண்ணெய் - தேவையான அளவு


 

அரிசியை கழுவி,தேவையான தண்ணீர் சேர்த்து,குழைய வேக வைத்துக்கொள்ளவும்.அல்லது,வேக வைத்த அரிசியை கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.வதக்கியவற்றை,ஆற வைத்து,மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
குழைந்த சாதத்துடன்,அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும்.
இதனை நன்றாக கலந்து,நெல்லிக்காய் அளவுக்கு,சிறியதாக கிள்ளி,ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்,வைத்து நன்கு வெயிலில் காய வைக்கவும். 2 அ 3 நாட்கள் நன்றாக காய வைக்கவும்.
இவற்றை,நன்கு காய்ந்த எண்ணெயில்,போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.சுவையான பிரண்டை வற்றல் தயார்.இது,சாம்பார் சாதம்,ரசம் சாதம்,காரக் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


இந்த பிரண்டை வற்றல்,வழக்கமான சாத வடகத்தை விட நன்றாக இருக்கும்.பிரண்டையின் வாசம்,வற்றலுக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.பிரண்டை வற்றலை வெயிலில் காய வைத்து,காற்று புகாத டப்பாவில்,போட்டு வைத்து கொண்டு தேவையான போது,எண்ணெயில் வறுத்துக் கொள்ளலாம்.மாதக்கணக்கில்,நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பரசி ஒரு ப்ரெண்ட் 5த் படிக்கும்போது இருந்தா. இப்போ உங்க பேர டைப் பண்ணும் போது அவ ஞாபகம் வந்துடுச்சு. பிரண்டை வற்றல் பக்கத்து வீட்டு ஆண்ட்டி செய்வாங்க. பிரண்டையோடு, உளுந்து, காராமணி, மிளகாய் எல்லாம் சேர்த்து செய்வாங்க. அவங்க செய்முறை கஷ்டம் பயறு எல்லாம் ஊற வைச்சு அரைச்சு செய்யறது ரொம்ப கஷ்டமா தெரியுது. ஆனா உங்க செய்முறை ரொம்ப ஈசியா இருக்கு. இனிமே வெயில் காலம் வந்தப்பிறகுதான் இந்த வத்தல் செய்முறை எல்லாம். உங்க குறிப்பு எல்லாமே நல்லா இருக்கு அன்பரசி.

வினோஜா,
எப்படி இருக்கீங்க?இது ரொம்ப எளிமையான குறிப்புதான்.செய்து பாருங்க.உங்களுக்கு பிரண்டை கிடைத்தால்,விளக்கப்படக்குறிப்பு அனுப்பலாமே.நீங்கள் சொல்லும் ரெசிப்பியும் வித்தியாசமா இருக்கு.நீங்களும் அந்த குறிப்பு அனுப்புங்க.உங்க பதிவுக்கு நன்றி.

// உங்க குறிப்பு எல்லாமே நல்லா இருக்கு அன்பரசி.//
ஐயய்யோ,இப்படி எல்லாம் பொய் சொல்லப்படாது.