சோயா 65

தேதி: October 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா சன்க்ஸ் - 2 கப்

சிக்கன் 65 மசாலா பொடி - 2 tsp

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 tbsp

கொத்தமல்லி - ஒரு கைபுடி


 

சோயாவை கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஊறியபின் தண்ணீரை பிழிந்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் சோயாவை சேர்த்து மசாலா தூளை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சுடு நீரில் ஊற வைப்பதால் தனியே வேக வைக்க தேவை இல்லை. சோயாவில் அதிக அளவில் புரதம் இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. அசைவம் சாபிடாதவர்கள் இதை நிறைய சேர்த்து கொள்ளலாம். சிக்கன் 65 மசாலா பிடிக்காதவர்கள், சிறிது வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து செய்து சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்