காலிஃப்ளவர் வறுவல்

தேதி: October 30, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

காலிஃப்ளவர் - 1

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய் தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 tsp


 

காலிஃப்ளவரை தனி தனியாக பிரித்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த சுடு நீரில் சிறிது நேரம் போடவும்.

தண்ணீரை நன்றாக வடிக்கட்டி பூவை நன்றாக கழுவி தனியே எடுத்து வைக்கவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

எண்ணெய் (2 tsp) காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிரட்டி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

5 நிமிடம் சென்ற பின் திறந்து கிளறி வேக விடவும்.

தண்ணீர் நன்றாக வற்றியவுடன் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.


வெங்காயம் தக்காளி சேர்ப்பதால் காலிஃப்ளவரில் ஒரு வித வாடை வராது.

மேலும் சில குறிப்புகள்