வெண்டைக்காய் பச்சடி.

தேதி: October 30, 2010

பரிமாறும் அளவு: 4 நான்கு நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

வெண்டைக்காய் - 100 கிராம்.
வெல்லம் - 100 கிராம்.
புளி - ஒரு நெல்லிக்காய் அளவுக்கு
மஞ்சத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க
எண்ணை - ஒருஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒருஸ்பூன்
மிளகா வத்தல் - ஒன்று


 

வெண்டைக்காய்களை நன்கு கழுவி மெல்லிய வட்டங்களாக கட் செய்யவும்.
ஒருபாத்திரத்தில் புளியைக்கரைத்து ஊற்றி மஞ்சத்தூள் சேர்த்து அடுப்பில்வைத்து சூடு பண்ணவும்.
ஒரு கொதி வந்ததும் கட் செய்துவைத்திருக்கும்வெண்டைகாய்களைச்சேர்க்கவும்
நன்கு கொதித்து, புளி வாசனை போய், காய்களும் வந்த பிறகு, வெல்லம் சேர்க்கவும்
எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்..


சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகள்முதல்
பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பில் ஒரு சந்தேகம், என்னவென்றால், வெண்டைக்காய் ஃப்ரை பண்ணாம அம்மா எதிலும் சேர்க்க வேண்டாம் என்று சொல்லுவாங்க, நீங்க அப்படியே புளியில் போட சொல்லிருக்கீங்க, அப்படி செய்யும் போது பசை பசையா வரும் இல்லையா?? எனக்கு தெரியலை அதான் கேட்டேன்!!

அன்புடன்
பவித்ரா