hi friends

hi friends how are you?
progyluton, thyroxine, clomid tablets ellam enna karanathuku sapitanum
puriyavillai.ennaku thirumanamaki 9 months kulanthai selvam illai doctor kitta poi check up panninom intha tablets kodothanga.please help me ennaku kulanthai pirapatharkana valzi muraikal solluga friends.ennaku payamaga irrku pa

ஹாய் புவனேஸ்வரி குழந்தை பாக்கியம் சம்பந்தமான கேள்வி என்பதால் மட்டுமே உங்களின் தங்கிலீஷுக்கு பதில் :-). இல்லைன்னா தங்கிலீஷுக்கு பதில் சொல்ல மாட்டோம். கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு அதை பயன் படுத்தி தமிழில் எழுதினால் இன்னும் நிறைய பதில் கிடைக்கும். அப்படியே தலைப்பையும் உங்கள் கேள்விக்கு ஏற்றார் போல் மாற்றி விடுங்கள். பின்னர் தேடுபவர்களுக்கும் பயன் படும்.

இப்போ உங்களுக்கான பதில்

PCOS இருப்பவர்களுக்கு progyluton, clomid இந்த இரண்டு மருந்துகளும் கொடுப்பார்களாம். thyroxine இது குறைவான தைராய்டு ஹார்மோன் அளவுக்காக கொடுப்பார்களாம். உங்கள் மருத்துவர் இதை உங்களிடம் சொல்லவில்லையா? சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. மருத்துவர் நமக்கு ஒரு சிகிச்சை முறை பரிந்துரை செய்கிறார்னா அது ஏன் எதுக்குன்னு தயங்காமல் உங்கள் சந்தேகத்தை கேளுங்க. உங்கள் அடிப்படை சந்தேகங்களை தெளிவு படுத்தும் கடமை மருத்துவர்களுக்கு உண்டு. அப்படி மறுக்கும் மருத்துவர் நிச்சயம் நல்ல மருத்துவர் இல்லை.

திருமணம் ஆகி 9மாதங்கள்தானே ஆகுது. கவலைப் படாதீங்க. நம்பிக்கையோடு இருங்க. எல்லாம் நல்ல படியாக நடக்கும். மனசை சந்தோஷமா வச்சுக்கோங்க எல்லாம் சரியாகும். உங்கள் எடை அதிகமா இருந்தா அதை குறைக்க முயற்சி செய்யுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்