மொச்சை சுண்டல் | arusuvai


மொச்சை சுண்டல்

வழங்கியவர் : Vani Vasu
தேதி : Sat, 30/10/2010 - 17:53
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4
3 votes
Your rating: None

 

  • மொச்சை - 2 கப் (ஊற வைத்து வேக வைத்தது)
  • வெங்காயம் - ஒன்று (சின்னது)
  • தக்காளி - பாதி (சின்னது)
  • சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - தேவைக்கு
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • தேங்காய் - சிறிதாக நறுக்கியது தேவைக்கு
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

 

வேக வைத்த மொச்சையுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும இதில் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.

பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதில் மொச்சை, நறுக்கிய தேங்காய் சேர்த்து பிரட்டவும்.

சாம்பார் தூளின் பச்சை வாசம் போய் தண்ணீர் இல்லாமல் வரும் வரை அடுப்பில் வைத்து கிளறி எடுக்கவும். சுவையான மொச்சை சுண்டல் தயார்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..வனிதா,

வனிதா,
மொச்சை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இதை சாதத்துடன்கூட சாப்பிடலாம் போல இருக்கே.நல்ல ரெசிப்பி.செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

வனிதா மேடம்

வனிதா மேடம்,

வாழ்த்துக்கள்
சாதம் கூட சேர்த்தும் சாப்பிடலாம் போலே இருக்கு நீங்கே எந்த வகை உபோயோக படுத்தி இருக்கீங்க ?

என்றும் அன்புடன்,
கவிதா

மொச்சை சுண்டல்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)

ஹர்ஷா & கவிதா... மிக்க நன்றி. சாதத்தோடு சாப்பிடும் அளவுக்கு மசாலா இருக்காது. தயிர் சாதத்துக்கு நல்ல பொருத்தம். செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா