காலிஃப்ளவர் கிரேவி

தேதி: October 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (22 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 5 பல்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
ஏலம், பட்டை, இலவங்கம், சோம்பு - தலா 2 (பொடிக்கவும்)
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தாளிக்க
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு


 

முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி,புதினா சேர்த்து நன்கு விழுது ஆகவும்
வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
எண்ணெய் பிரியும் போது காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்
பின்பு பொடித்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
காலிஃப்ளவர் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கவி காலிஃப்ளவர் கிரேவி பார்க்க ரொம்ப நல்லா இருக்குபா நான் ஊருக்கு போறேன்பா அதுனால முடியும் போது செய்து பார்த்துட்டு சொல்லுறேன் கவி

கவி எனக்கு பிடித்த காய்கறியில் காலிஃபிளவரும் ஒன்று அடிக்கடி செய்வேன் இந்த முறை இது போல் செய்து பார்க்கிறேன் பார்க்கும் போதே வாய் ஊருது பா நிச்சயம் நாளைக்கே செய்கிறேன்

கவி எனக்கு பிடித்த காய்கறியில் காலிஃபிளவரும் ஒன்று அடிக்கடி செய்வேன் இந்த முறை இது போல் செய்து பார்க்கிறேன் பார்க்கும் போதே வாய் ஊருது பா நிச்சயம் நாளைக்கே செய்கிறேன்

கவிதா,
காலிஃபிளவர் க்ரேவி,நான் வதக்கிவிட்டு அரைப்பேன்.உங்கள் முறையில் செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

கவிதா, உங்க சமையல் எப்பவும் சிம்ப்ளி சூப்பர்ப் பா. வழக்கம் போலவே இதுவும் எளிமையான மசாலா பொருட்களோட நல்லாவே இருக்கு. என் சமையல்ல கண்டிப்பா இதுவும் இடம் பெறும். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

nasreen ,

சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மெர்சனா,

செய்து பார்த்து விட்டு சொல்லுங்க வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,கல்பனா,

சுலபமா செய்யலாம் பொருள்களை அரைத்து எடுத்து கொண்டு வெளியே சென்று கூட சமைத்து விடலாம் கணவருடன் ஒரு பார்ட்டியில் இதை தான் சமைத்தேன் எல்லாருக்கும் பிடித்தது

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றாக இருந்தது கவிதா இந்த கிரேவி வாழ்த்துக்கள் நன்றி..

வாழு, வாழவிடு..