உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: October 31, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (11 votes)

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெள்ளைப்பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


 

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெள்ளைப்பூண்டை தட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை, சோம்பு, தட்டிய வெள்ளைப்பூண்டு போட்டு தாளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கு பாதி வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

அவ்வப்பொழுது கிளறி விட்டு வெந்ததும் இறக்கி விடவும்.

சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.


எழுமிச்சை சாதம், தயிர் சாதம், அரிசி பருப்பு சாதம், புளி சாதம் போன்றவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். பிக்னிக் போன்ற பயணங்களுக்கும் ஏற்றது. காரம் அதிகம் விரும்புபவர்கள் மேலும் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெய்,
என்ன எனக்கு பிடிச்ச ரெசிப்பியா கொடுத்திருக்கீங்க. எங்க வீட்டில் எவ்வளவு செஞ்சாலும் தீர்ற ஒரே ஐட்டம்னா அது உருளைக்கிழங்குதான்.அக்காவும் நானும் ரொம்ப விரும்பி சாப்பிடுவோம்.எங்க வீட்டில் ரொம்ப காரமா செய்வோம்.ரொம்ப டேஸ்ட்டான ரெசிபி கொடுத்த ஜெய்க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.

அன்புடன்
நித்திலா

எங்க வீட்டிலேயும் காரமாதான் செய்வோம்பா இங்க மாம்ஸும் பையனும் காரம் அவ்வளவா சாப்பிடமாட்டாங்க அதனால கொஞ்சம் கம்மியா போட்டு அதுவே எனக்கும் பழகிடுச்சு;-)

ஸ்பெஷல் பாராட்டு கொடுத்த நித்திலாக்குதான் நான் ஸ்பெஷல் நன்றி சொல்லனும்;-) நன்றி! நன்றி! நன்றி!

Don't Worry Be Happy.

நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன் ,என் கணவர் பாராட்டை பெற்றேன் ,சாம்பார் கூட உருளை கிழங்கு பொரியல் மிக அருமை ,நன்றி ஜெயலக்ஷ்மி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பூண்டு வாசத்துடன் அருமையாக இருந்தது.....,நன்றி ஜெயலக்ஷ்மி.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.