கோவை அரிசிபருப்பு சாதம்

தேதி: October 31, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

பொன்னி அரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
குருமிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமல்லிவிதை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3 எண்ணம்
பூண்டு - 5 பல்
தேங்காய் - 1 கீற்று
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்


 

அரிசியை,பருப்பு நன்கு கலைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும்.

பூண்டு தோல் உரித்து வைக்கவும்.

தேங்காய் பொடியாக அரிந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, குருமிளகு, சீரகம், வரமல்லிவிதை, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

இதனுடன் பூண்டு, வெங்காயம்,தேங்காய், தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து களைந்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் விடவும்.

கொத்துமல்லி இழை தூவி கிளறவும்.

சுவையான கோவை அரிசிபருப்பு சாதம் தயார்.


பொரித்த அப்பளத்துடன் சூடான சாதத்தின் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையை அள்ளும்.

( சாதம் வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் பருப்புக்கு என்று தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை )

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெய்,
எப்படி இருக்கீங்க?அரிசிபருப்பு சாதம் எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்.எனக்கு ரொம்ப பிடிக்கும்.நிறைய நெய் ஊத்தி சாப்பிடுவேன்.எப்பவாவது தயிர் ஊத்தி சாப்பிடுவேன்.ஒரு சூப்பரான ரெசிபி கொடுத்திருக்கீங்க.(நான் தீபாவளி முடிஞ்சு கொடுக்கலாம்னு நினைச்சுட்டிருந்தேன்.நீங்க கொடுத்திட்டீங்க.பரவாயில்லை யார் கொடுத்தா என்ன ஒரு நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க).சூடாக சாப்பிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்.அடிக்கடி செய்வீங்களா ஜெய்?

அன்புடன்
நித்திலா

கோவை மக்களுக்கு தெரிஞ்ச உடனடி பசி தீர்க்கும் உணவே இதுதானேபா ஹி ஹி
தயிர் ஊத்தி சாப்பிடறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

இவ்வளவு நாள்ல இதுவரைக்கும் எக்ஸாட்ட இந்த குறிப்ப யாருமே குடுக்கலையே அந்த விசயத்தில நான் கொடுத்து வைத்தவள்தான்;-)
நீங்க கொடுத்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்;)
அப்ப தீபாவளி முடிஞ்சு நீங்களும் கூட்டாஞ்சோறு வில் ஐக்கிமாகப் போறிங்க
அப்படிதானே அதுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்பா;-)

பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி;-)

Don't Worry Be Happy.

ரொம்ப சூப்பர் .இன்று என்ன செய்யலாம் என்று யோசனையோடு இருந்தேன்.மீன் இறால் எதுஉம் ஸ்டாக் இல்லை.
தேங்க்ஸ்பா
செய்துவிட்டு சொல்லுகிறேன்.
இதை நாங்கள் சமைத்ததே இல்லை.

ஹசீன்

வாங்க லூலு, கண்டிப்பா செய்துபாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லிடுங்க சரியா;-)
இதுவரையும் சமைச்சதே இல்லையா, இனி அடிக்கடி சமைப்பீங்கபா, ரொம்ப ஈசியா இருக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்;)

பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி;-)

Don't Worry Be Happy.

hi madam, thanks for super simple receipe, i have a doubt that varamilakai is enough or shall we add chilli powder for this rice.

அன்பு ஜெயலக்ஷ்மி,

நல்ல ரெசிபி. நான் வாரத்தில் ஒரு நாள் இந்த மாதிரி, பருப்பு சாதம்,உளுத்தம்பருப்பு சாதம் என்று செய்வேன்.(காய்கறிகள் இல்லாமல்).

இதிலே தக்காளி, வெங்காயம் சேர்த்து செய்த்தில்லை. அவசியம் செய்து பார்க்கிறேன். ஒரு சந்தேகம், குறுமிளகுன்னு கொடுத்திருக்கீங்களே, சாதாரணமாக நாம் சமையலுக்கு உபயோகிக்கும் மிளகையே உபயோகிக்கலாமா?

அன்புடன்

சீதாலஷ்மி

நிர்மலா முருகன் அவர்களே,

வரமிலகாயின் ருசி, மிலகாய் பொடியில் இருக்காது. வரமிலகாயே சேர்த்து செய்ய முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்
கண்ணன்,துபாய்

ஜெயா

உங்களுடைய இந்த ரெசிப்பி தான் இன்னைக்கு செய்தேன். ஈரோடுல காலேஜ் படிக்கும்போது சாப்பிட்டது. ஃப்ரெண்ட்ஸ் வீட்ல இருந்து கொண்டுவருவாங்க. ரொம்ப நல்லாருக்கும். ஆனால் எப்படி சமைப்பது என்று தெரியாது. ரொம்ப நாளைக்கு அப்பறம் கோயம்புத்துார் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி. நல்லாருந்ததுப்பா.. பையனும் விரும்பி சாப்பிட்டான். தேங்ஸ்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நேத்து உங்க ரெஸிபி தான்.. சூப்பரா இருந்தது..முட்டை பொறியலுக்கு..நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நேற்று இந்த சாதம் செய்தோம்ல... சூப்பர்ன்னு பேர் வாங்கிட்டோம்ல. அதனால் நன்றி சொல்ல வேணும்னு வந்தேனாக்கும் இந்த பக்கம் :)

ரொம்ப ஹெவியா இருக்குமோன்னு நினைச்சேன்... ஆனா சாப்பிட லைட்டா ஜீரணத்துக்கு சுலபமா குழந்தையும் விரும்பி சாப்பிட்டான். எனக்கு ரொம்ப பிடிச்சுது. அவரும் சூப்பர்ன்னு சொன்னார். :) அதனால்... பெரிய தேன்க்ஸ்.

இனி அடிக்கடி செய்வேன். நானும் ஈரோடில் கல்லூரில் படிச்ச நாட்களில் ஹாஸ்டலில் சாப்பிட்டிருக்கேன். ஆனா அது மதுரை வெர்ஷன்... வெங்காய், தக்காளி இல்லாம அரைச்சு செய்திருப்பாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா! குறிப்பு கொடுத்துட்டு போனதோட சரி இந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கலை;( எல்லாரும் மன்னிச்சுடுங்க;(

நிர்மல் முருகனுக்கு தக்க சமயத்தில் ஹெல்ப் பண்ணிய கண்ணனுக்கு மிக்க நன்றி. நிர்மல் முருகன் சென்சு பாத்தீங்களா உங்களுக்கு பிடிச்சதா?

சீதாம்மா நீங்க அடிக்கடி இந்த சாதம் செய்வதாய் மஞ்சு அவர்கள் குறிப்பில் படிச்சதுமே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது;) உங்க டவுட்டையும் நான் பாக்கலை;( குறுமிளகுதான் மிளகும் (பெப்பர் ) ரொம்ப சாரிமா நான் இனி கொடுத்த ஒவ்வொரு குறிப்பையும் தேடிப்பிடிச்சு பாக்கறேன் யாருக்காவது எதாவது டவுட் இருக்கான்னு.

ராதா ஹரி., மிக்க நன்றிபா செஞ்சு சாப்பிட்டதோட அல்லாமல் பின்னூட்டமும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கீங்க. இனிமேலாவது சமையலுக்குன்னு டைம் ஒதுக்கி குறிப்பு கொடுக்கறேன் மிக்க நன்றி;-)

ரம்ஸ்.,நல்லார்ந்ததா ரொம்ப சந்தோசம்டா பின்னூட்டத்திற்கு ரொம்ப தேங்க்ஸ்டா ;-)

வனி., ரொம்ப தேங்க்ஸ்மா;-) எல்லாருக்கும் பிடிச்சதா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வனி;) எங்க பாட்டி கையில சாப்பிட்டது இன்னும் நியாபகம் இருக்கு, அந்த அளவுக்கு எங்கம்மாக்கும் செய்யத்தெரியலை, எங்கம்மா அளவுக்கு எனக்கும் செய்யத்தெரியலைன்னே சொல்லலாம்;) பாட்டி பானையில செய்வாங்க அம்மா பாத்திரத்தில, நாம குக்கர் அதனால வேறுபாடு வரும்னு நினைக்கிறேன். முடிஞ்சா உங்களுக்கு பானை கிடைச்சதுன்னா, அதிலேயும் ஒரு முறை செஞ்சு பாருங்க இன்னும் சுவையா இருக்கும். மீண்டும் நன்றி உங்க பதிவுகள் எனக்கு மேலும் உற்சாகம் கொடுத்துருக்கு கண்டிப்பா மீண்டும் குறிப்பு கொடுக்கறேன்;-)

Don't Worry Be Happy.

ஜெய்,
உங்க குறிப்பை செய்யணும்னு ரொம்ப நாளா நினச்சுட்டு இருந்தேன். நேற்று செய்து சாப்பிட்டாச்சு.ரொம்ப அருமையா இருந்தது.குறிப்பை விருப்ப பட்டியலிலும் சேர்த்தாச்சு.அருமையான குறிப்பை தந்ததற்கு மிக்க நன்றி.தொடர்ந்து குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ஜெய்.

ஹாய் இன்று உங்கள் கோவை அரிசி பருப்பு சாதம் செய்தேன். நன்றாக இருந்தது. எளிமையான குறிப்பு .நன்றி

Dreams Come True..