இரண்டு மாத கருவை களைக்க

உங்களுக்கு நன்றி.............................. உங்களை தொடர்பு கொள்வது எப்படி என தெரியாமல் செய்து விட்டேன் மன்னிக்க வேண்டும்........, எனது பெயர் பாத்திமா, திருமனமாகி சில மாதங்கள்தான் ஆகின்றது. நான் இப்போது இரண்டு மாத கருவுற்றிருக்கின்றேன், அனால் என்னால் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது காரணம், 1.எனது படிப்பை தொடர முடியாமல் போகும். 2. எங்களுக்கு குழந்தையை வளர்க்க வருமானம் போதாது எனவேதான் நாங்கள் கருவைக்களைக்க முடிவு எடுத்துள்ளோம். இதனை எவ்வாறு செய்வது ? என்று கூறுங்கள். இலங்கையில் இத்ற்குரிய டொக்டர் யார்? அவரை நாங்கள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று கூறுங்கள்?
usfathima@yahoo.com இது என்னுடைய E-mail ID தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல பாதிலை தாருங்கள் please........

hi...naa shamila..nalla irukingalaaa......naan dubai ill vasikireen...neega thappa yeduthukadhinga....kozandai namaku kadavul kudukkum miha periyaaaa parisu...oru ponnuku adha thavira santhosam vera yaaraalum thara mudiyaadhu.........ok ippa neega poodhiye varumaanam illanu solringa,,2 years kalichu panam vandha udane kolandhe undaakalainaa yenna pannu vinga....sry yenna thappa ninaikaadhinga...yenga family le ipdi nadadhu chu yee cousin oruthi ippadi dha....2 months abt panna....ippa paakadhe doctor illa...15 years aachu..........no baby.....soo plss abt pannradhuku munnadi nalla think paanikooga...sistera ninaichu dha sonne.....if i hurt sry again

தோழி ஃபாதிமா இந்த அருசுவையில் குழந்தை க்காக ஏங்கும் பெண்கள் நிரைய பேர் இருக்கிரார்கள் ஏன் நானும் அதில் ஒருத்தி தான். கல்யாணம் ஆகி உடனே கர்பமாகி உள்ளீர்கள் என்றால் உங்களை விட பாக்கியசாலி எவரும் இல்லை. படிப்பு என்பது 60 வயதிலும் படிக்கலாம் என்பார்கள். ஏன் நீங்கள் குழந்தையை பெற்று எடுத்து வளர்த்து ஸ்கூல் செல்ல அனுப்பிவிட்டும் படிக்கலாம் படிப்பு என்பது நம் கையில் தான் உள்ளது. தயவு செய்து நீங்கள் முதலில் குழந்தை வரம் வேண்டுவோர் த்ரட் பாருங்க அப்பரம் இந்த முடிவு எடுக்க மாடீங்க . வசதி இதையெல்லாம் நினைக்கவே கூடாது . முதலில் குழந்தைகளை நேசிக்க ஆரம்பிங்கள். இன்னும் நிரய சொல்வேன் இந்த த்ரட் பார்த்த உடனே பேச்சே வரவில்லை யோசிங்கள் எனக்கே மனது கஷ்டமாக உள்ளது . உங்களுக்கு குழந்தை இப்ப வேண்டாம் என்றால் கவனமாக அல்லவா இருந்துருக்க வேண்டும் . கண்னேதிரே ஒரு சின்ன பறவை கஷ்டபட்டாலே தாங்க முடியாது . உங்கலது உயிரை அழிக்க எப்படி முடியும்.

அன்புடன்
ஸ்ரீ

நல்லாருக்கீங்களா? உங்க பதிவைப்பார்த்தேன் ரொம்ப சங்கடமா இருக்கு. சொன்னமாறி எத்தனையோ பேர் குழந்தை இல்லாம் ரொம்ப கஷ்டப்படறாங்க நீங்க இப்படி சொல்றீங்களே? எல்லாரும் நல்லா சம்பாரிச்சு வெச்சுட்டா குழந்தையை பெத்துக்கறாங்க??? தயவுசெய்து முதல்முதலா நீங்க மாசமாய்ருக்கீங்க தப்பான எந்த முடிவும் யோசிக்ககூட செய்யாதீங்க படிப்பை எப்ப வேணாலும் படிச்சுக்கலாம். அதுவும் உங்களமாறி ஒரு உயுர்மா அதை எதுவும் பன்னிராதீங்க ஓகே. இப்படி சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க. நல்லபடியா உங்க குழந்தையை பெத்து எடுங்க அப்பறம் யோசிப்பீங்க எப்படி நாம அப்படி நினைச்சோம்னு???

இஸ்லாம் தோழிகள் இப்படி சொல்றதுக்கு தப்பா நினைக்ககூடாது நான் கேள்விப்பட்டுருக்கேன் இஸ்லாம்-ல குடும்பகட்டுப்பாடு கூட பன்னக்கூடாது அது ஒரு பாவம்னு? நீங்க எப்படி இப்படி நினைக்கறீங்க??? என்னால நம்ப முடியலை பாத்திமா? மறுபடியும் சொல்றேன் தப்பா எந்த முடிவும் எடுத்துராதீங்க உங்க சின்ன உயிரை பத்திரமா இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துங்க ஓகே.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் ஃபாத்திமா மிகவும் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனால் மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஃபாத்திமா. வயிற்றில் குழந்தையோடு படிப்பைத் தொடர்வது சிரமம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனால் அப்படி பெற்றெடுத்தவர்களும் உண்டு. அம்மாவும் பொண்ணுமா காலையில் கிளம்பி ஒருவர் கல்லூரிக்கும் மற்றவர் பள்ளிக்கும் செல்லும் குடும்பங்களும் இருக்கின்றன.

அடுத்து உங்கள் பொருளாதார சூழ்நிலை. யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஒன்னு யோசிங்க அலை எப்போ ஓய்வது தலை எப்போ முழுகுவதுன்னு காத்திருந்தா கடலில் குளிக்க முடியுமா? அதுபோல்தான் பொருளாதாரச் சூழல்களும். நீங்க வாழ்வில் செட்டில் ஆகும் வரைக்கும் உங்கள் இளமை காத்திருக்குமா? வயது கூடக் கூட கருத் தரிப்பதன் சதவீதம் குறையும். காரணம் பெண்களின் கருமுட்டையின் சக்தி குறையும்.

ஒருமுறை கருக்கலைப்பு செய்வது என்பதால் நிச்சயம் கருப்பையில் சிறிய அளவில் சேதம் உண்டாகும். எத்தனை பாதுகாப்பாக செய்து கொண்டாலும் நூறு சதவீதம் எந்த பாதிப்பும் இல்லைன்னு உத்தரவாதம் கிடையாது. பின்னர் நாம் விரும்பும் போது கருத்தரிப்பதில் சிரமம் இருக்கலாம். அப்போது வேதனைப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

அப்போ கருக்கலைப்பு செய்து கொண்டவர்களுக்கெல்லாம் அதன் பின் குழந்தையே பிறப்பது இல்லையான்னு நீங்க நினைக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படிப் பட்ட அதிர்ஷ்டசாலிகளாக இருக்க முடியாதே சகோதரி. கிடைத்த அதிர்ஷ்டத்தை நழுவ விட்டு விடாதீர்கள்.

எங்களால் சொல்ல மட்டுமே முடியும் சகோதரி. முடிவு முழுக்க முழுக்க உங்கள் இருவர் கையில் மட்டுமே! ஆனால் எங்கு போய் அதைச் செய்யலாம் எப்படி செய்யலாம்னு யாரும் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்காதீங்க :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சகோதரி பாத்திமா, நீங்கள் எடுத்து இருக்கும் முடிவு அனேகமாக அறுசுவை தோழிகள் யாரும் விரும்பமாட்டார்கள்மா. இதே தளத்தில் நான் குழந்தைக்காக மருத்துவம் கேட்டிக்கிரேன். ஹாஸ்பிடல் சென்று குழந்தக்காக 6 மாதமாக ட்ரீட்மேன்ட் எடுத்து கொண்டிருக்கிரேன். ஆனால் உங்களுக்கு அப்படி ஒரு நிலமை இல்லாமல் கடவுள் குழந்தை வரம் கொடுத்துள்ளார். என்றால் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலி என்றுதான் நான் சொல்லுவேன். நாங்கள் கேட்டு கிடைக்காத வரம் உங்களுக்கு கேட்காமலே கிடைத்துள்ளது தோழி அதனை நினைத்து சந்தோஷம் கொள்ளுங்கள் பா
கல்வி என்பது எந்த வயதிலும் படிக்கலாம். பணம் என்பது நாம் பார்த்து சம்பாதிப்பது. அது திடீரென்று நம்மை தேடி வந்துவிடும்.ஆனால் மழலைசெல்வம் கடவுள் கொடுப்பது. எனவே எனவே இது ஒரு முகம் தெரியாத தோழி என்று நினைக்காமல் ,உங்கள் சகோதரியாக நினைத்து முடிவெடுங்கள் பா
ப்ளிஸ் எந்த தவறான முடிவும் எடுத்துவிடாதீர்கள் மா!

ஏமாறாதே|ஏமாற்றாதே

தோழி ஃபாத்திமா! மற்ற தோழிகள் கருக்கலைப்பு வேண்டாம் என்பதை அழகிய முறையில் சொல்லியுள்ளார்கள்.அறுசுவையை பார்வையிட வந்த நான், உங்கள் பதிவுக்கு பதில் சொல்லாமல் போக மனமில்லாமல் இதை பதிகிறேன்.

சொல்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். நீங்கள் தற்போது குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பாத நிலையில் குழந்தை கிடைத்துள்ளது என்பது உங்களின் கவன‌க் குறைவால் வந்த தவறு. இப்போது ஒரு பிஞ்சு உயிரைக் கலைக்க நினைப்பது மிகப் பெரிய தவறு. அது கொலை செய்வதற்குரிய பாவமாகும். படிப்பை தொடர முடியாவிட்டால் என்ன, உருவான ஒரு உயிரை அதற்காக பலி கொடுக்கணுமா தோழி? குழந்தையை வளர்க்க வருமானம் போதாதா...?! அது முன்பே யோசிக்கவேண்டியது. இப்போது அதற்கு காலம் கடந்துவிட்டதால், உங்களைவிட வருமானத்தில் குறைந்தவர்கள் எப்படி குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று பொறுமையா யோசித்து பாருங்க. அப்படியே ரொம்ப கஷ்டப்பட்டீர்கள் என்றால், உங்கள் இருவருக்கும் நீங்கள் செலவழிக்கும் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டு, உங்கள் குழந்தையை பெற்று சந்தோஷமா வளருங்க. கருக்கலைப்பு என்ற தீமையை தவிர்த்துக் கொண்டதன் மூலம் இறைவன் உங்களுக்கு செல்வத்தை அதிகமாக்கித் தருவான். விரைவில் உங்களின் நல்ல முடிவை எதிர்ப்பார்க்கிறேன்.

உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

//இஸ்லாம் தோழிகள் இப்படி சொல்றதுக்கு தப்பா நினைக்ககூடாது நான் கேள்விப்பட்டுருக்கேன் இஸ்லாம்-ல குடும்பகட்டுப்பாடு கூட பன்னக்கூடாது அது ஒரு பாவம்னு? நீங்க எப்படி இப்படி நினைக்கறீங்க??? என்னால நம்ப முடியலை பாத்திமா?//

நிச்சயம் தப்பா நினைக்கல :) தாயின் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது குடும்பக் கட்டுப்பாடோ, ஏன் கருக்கலைப்போ கூட இஸ்லாமிய மார்க்கத்தில் பாவமில்லை. இந்த ஒரே ஒரு காரணத்தை தவிர மற்ற காரணங்களுக்காக என்றால், நீங்கள் சொல்வது சரியே! (எந்த காரணமும் இல்லாமல் இருந்தால், தற்காலிக குடும்ப‌க் கட்டுப்பாட்டிற்கு அனுமதியுண்டு)

வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்,நிச்சயமாக உணவளிப்பவன் இறைவனே.இதை நம்புங்கள்.நல்ல வழி கிடைக்கும்.அஸ்மாவின் கருத்துக்கள் மிகமிக சரி

இரண்டு முறை பதிவாகி விட்டது.

மேலும் சில பதிவுகள்