குஜராத்தி கடி

தேதி: November 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தயிர் - 1 கப்
இஞ்சி - சிறுத் துண்டு
கடலை மாவு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
சர்க்கரை - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் - தாளிக்க


 

முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தயிரில் கடலைமாவு, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து அடிக்கவும்
கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக்கி அதையும் தயிர் கலவையில் சேர்க்கவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றையும் தயிர் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்
கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்.

புலாவ், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சிறந்த பக்க உணவு. விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் எளிமையாக செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி, நல்ல குறிப்பு, ஆனா கடலை மாவு சேர்த்திருக்கீங்க, அதை கொதிக்க விடாம விட்டுட்டா, பச்சை வாசம் வரும் தானே!!

வாழ்த்துக்கள் :))

அன்புடன்
பவித்ரா

எனக்கும் அதே சந்தேகம்தான்.

‍- இமா க்றிஸ்

கவிதா,
வித்தியாசமா இருக்கே,உங்க குறிப்பு.வாழ்த்துக்கள்.
உங்களுக்கு மெயில்(Yahoo id)அனுப்பினேன்.check பண்ணீங்களா?

கவிதா, குறிப்பு வித்யாசமா இருக்குப்பா. ஆனா, பவியோட சந்தேகம் தான் எனக்கும். கடலை மாவு பச்சை வாசனை வராதா பா? நீங்க பதில் தந்தவுடனே செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே மாதிரி வித்யாசங்களை தந்து அசத்துங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவி,கல்பனா ,இமா மேடம் ,

நான் அதிகமாக கடலை மாவு சேர்க்கவில்லை அதனால் பச்சை வாசம் தெரியாது இதை அப்படியே சில பொருள் சேர்த்து கொதிக்க வைத்து விட்டால் மோர்குழம்பு ஆகிவிடும் வித்தியாசமான சுவையோடு இருக்கும் முயற்சி செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி,

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

மெயில் கிடைக்க பெறவில்லை

என்றும் அன்புடன்,
கவிதா

நானும் இதுபோல பஞ்ச்சபி கடின்னு குறிப்பு ரெடிபண்ணி வச்சிருக்கேன்.
அதுவும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செய்யனும். ஆனா லேசாக
சூடு பண்ணனும்.

கவிதா மேடம் அந்த சில பொருள்கள் எதுன்னு சொல்ல கூடாதா ? எனக்கு மோர் குழம்பு செய்ய தெரியாது .அறுசுவையுலும் தயிர் மோர்ன்னு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை எதாவது தெரிந்தால் சொல்லுங்களேன். நட்புடன் மஹ்னீஸ்