SAP கோர்ஸ்- பத்தி தெருஞ்சவங்க இங்க வந்து சொல்லுங்க

வணக்கம் தோழிஸ், SAP கோர்ஸ் பத்தி தெருஞ்சுக்கலாம் நு ஆசை. நம்ம அறுசுவை ல நிறைய பேர் வெளிநாட்டுல இருக்கீங்க, வெளி ஊர்ல இருக்கீங்க. கண்டிப்பா உங்களுக்கு இந்த கோர்ஸ் பத்துன details தெருஞ்சு இருக்கலாம். தெருஞ்சவங்க சொன்னீங்கன்ன, எங்கள மாதிரி தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

உங்க கணவர், உங்க ப்ரிண்ட்ஸ், இல்ல நீங்களே இந்த பீல்ட் ல இருக்கலாம். இந்த கோர்ஸ் கு இருக்கற value , எங்க இந்த கோர்ஸ் படிக்கலாம், இந்த கோர்ஸ் கு இருக்கற வேலை வாய்ப்பு, இத பத்தி எல்லாம் இங்க பேசலாம் வாங்க......

ஹெலோ சுகந்தி.

நல்லா இருகிங்களா? எனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் .net Developer பா. யாராவது அனுபவமுல்லவர்கள் சொல்றாங்களான்னு பார்ப்போம்

நான் நல்லா இருக்கேன் ஷாபானு. நீங்க எப்படி இருக்கீங்க?? எனக்கும் SAP பத்தி தெருஞ்சுக்க ஆசை தான். அதுக்காக தான் போஸ்ட் பண்ணினேன். ஆனால், யாருமே reply பண்ணல. பாக்கலாம்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு சுகந்தி,

என் பெண் SAP HR முடிச்சிருக்கா. அவளோட பி.ஜி.டிகிரி - எம்.பி.ஏ. ஹெச்.ஆர். அதனால, இதுலயும் ஹெச்.ஆர். சம்பந்தமாக படித்தார்.

நிறைய பேர் இந்த கோர்ஸ் நடத்தறாங்க. ஜெர்மனியின் அப்ரூவ்ட் லாப் சில பேர்தான். சென்னையில் சீமென்ஸ் கம்பெனி நடத்தறாங்க. இன்னும் ஓரிரண்டு நிறுவனங்கள் இருக்குன்னு நினைக்கிறேன். இதிலேயே உங்க பேஸிக் டிகிரி ரிலேடட் ஆகப் படிக்கணும். ஃபங்ஷனல், டெக்னிகல்னு பிரிவுகள் - கிட்டத்தட்ட ஆறு பிரிவுகள் இருக்குன்னு நினைக்கிறேன்.

1 மாத கோர்ஸ் - 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை கோர்ஸ் ஃபீஸ். அதுக்கப்புறம் எக்ஸாம் ஃபீஸ் - சுமார் 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.

2 அட்டெம்ப்ட் அனுமதி உண்டு. முதல் தடவை க்ளியர் செய்யலைன்னா, இரண்டாவது தடவையும் எக்ஸாம் ஃபீஸ் கட்டணும். மூன்றாவது தடவை என்றால், திரும்பவும் கோர்ஸ் ஃபீஸ் கட்டணும்.

நான் சொல்லும் இந்தத் தகவல்கள், என் மகள் 3 வருடத்துக்கு முன்னால் படித்தபோது. இப்போ ஃபீஸ் கூடுதலா என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் ஹைரோடில் சீமென்ஸ் ஆஃபிஸ் இருக்கு. மெயில் அனுப்பினால் டிடெயில் அனுப்புவாங்க. இந்த கோர்ஸ் செய்வதற்கு முன்னால், வேலை பார்த்த எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கான்னு வெரிஃபை செய்துக்குவாங்க. அங்கே கௌன்சிலர் இருப்பாங்க. அவங்ககிட்ட டிஸ்கஸ் செய்யலாம்.

இப்போது இது ஹாட்டாக உள்ள குவாலிஃபிகேஷன். யு.எஸ்.ல நிறைய ஓபனிங் இருக்கு. இங்கேயும் இன்ஃபோஸிஸ் போன்ற கம்பெனிகளில் நிறைய ஓபனிங் இருக்கு. ஆனால் எக்ஸ்பீரியன்ஸ் கேக்கறாங்க. அப்ரூவ்ட் செர்டிஃபிகேட் என்றால் வால்யூ கூடுதல்தான்.

ஆந்திராவில் நிறைய இன்ஸ்டிட்யூஷன்ஸ் நடத்தறாங்க. ஓரளவு ஃபீஸ் கம்மி. அங்கே நல்ல முறையில் சொல்லித் தருவதால், அப்ரூவ்ட் இல்லன்னாலும் கம்பெனிகள் ஏற்றுக் கொள்வார்களாம்.

படிச்சு முடிச்சுட்டு, ஃப்ரீலான்சர் கோச் ஆக வகுப்புகள் எடுக்க முடிந்தாலும் நல்ல வருவாய் கிடைக்குமாம்.

எனக்குத் தெரிந்த அளவு சொல்லியிருக்கேன், வேறு தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கேளுங்கப்பா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹெலோ சுகந்தி.

நல்லா இருகிங்களா? நான் Dubai Accountant பா. யாராவது அனுபவமுல்லவர்கள் சொல்றாங்களான்னு பார்ப்போம்.இப்போது இது ஹாட்டாக உள்ள குவாலிஃபிகேஷன்.dubai la நிறைய ஓபனிங் இருக்கு.

.
எனக்குத் தெரிந்த அளவு சொல்லியிருக்கேன்

அன்புடன

மணிமேகலை ராம்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

இப்ப தான் பாக்கறேன். எக்ஸ்பீரியன்ஸ் நு சொல்லி இருக்கீங்க இல்ல?? அது என்ன?? ல எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா? இல்ல ஏதோ ஒரு பீல்ட் ல இருந்த போதுமா? நம்ம ug டிகிரி ரொம்ப முக்கியமா?? ஏன்னா, என் டிகிரி நுட்ரிதியன், எனக்கு இந்த department , சுத்தமா பிடிக்காது!!!!!!. அதான் கஷ்டப்பட்டு webdesigning பீல்ட் ல நுழைஞ்சு இருக்கேன்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு சுகந்தி,

சென்னைல உள்ள சீமென்ஸ் அட்ரெஸ், மெயில் ஐ.டி., ஃபோன் நம்பர் கீழே தந்திருக்கேன். இவங்களுக்கு பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற இடங்களிலும் அலுவலகங்கள் இருக்கு. நான் சொல்வது 3 வருடத்துக்கு முன்னால் உள்ள தகவல்கள் அடிப்படையில். நீங்க சென்னை நம்பருக்கு ஃபோன் செய்யலாம், அல்லது மெயில் கூட அனுப்புங்க. உடனே டிடெயில்ஸ் அனுப்புவாங்க. இப்ப ஒரு வேளை கோவையிலும் அவங்க ஆஃபிஸ் இருக்கலாம் இல்லையா!

Siemens Information Systems Ltd.,
4, Mahatma Gandhi Road, 5th Floor, Nungambakkam, Chennai - 34
Ph.: 44-28334360/4361/4362
email : sapatchen.in@siemens.com

ஐ.டி. ஃபீல்டில் வேலை செய்யும் எக்ஸ்பீரியன்ஸ்தான் கேப்பாங்க. பேசிக் டிகிரி பற்றி ப்ரச்னையில்லை. ஏன்னா, என் மகளுடன் இந்த கோர்ஸ் அட்டெண்ட் பண்ணவங்க எல்லோருமே, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேஸிக் க்வாலிஃபிகேஷன் வச்சிருந்தாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நண்றி. SAP பத்தி DETAILS குடுத்ததுக்கு

இன்னும் கொஞ்சம் தகவல்கள்

இந்த கோர்ஸ் படிக்க பாங்க்ல லோன் கிடைக்கும். ஸ்டேட் பாங்க்னு நினைக்கிறேன். சீமென்ஸ்லருந்து அட்மிஷன் லெட்டர் காப்பி சப்மிட் செய்து லோன் வாங்கிக்கலாம். 3 லட்சம் லோன் என்றால், பாங்க்ல ஒரு லட்சம் டெபாசிட் பண்ணுங்கன்னு சொல்வாங்க. கொஞ்சம் பேசி, அமவுண்ட் குறைச்சலாக டெபாசிட் பண்ணலாம்.

அதே மாதிரி, கோர்ஸ் ஃபீஸ் - எர்லி பெர்ட் டிஸ்கவுண்ட் என்று 15% வரை தருவாங்க. நாமதான் கேக்கணும். கேட்டால்தான் கிடைக்கும்.

இது ஆன்லைன் டெஸ்ட். நிதானமாக, ரிலாக்ஸ்ட் ஆக, அட்டெண்ட் செய்யணும். (ஏற்கனவே இந்த மாதிரி ஆன்லைன் எக்ஸாம் எழுதியிருக்கீங்களா)
ஒரு தடவை ஆன்ஸர் கிளிக் செய்து விட்டால் மாற்ற முடியாது. ஆனால், ஹோல்ட் செய்து வைத்து விட்டு, அடுத்த ஸ்டெப் போகலாம்.

ஆல் த பெஸ்ட்

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்