ஓட்ஸ்( டயட்) கஞ்சி.

தேதி: November 2, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (8 votes)

 

ஓட்ஸ் - 4ஸ்பூன்
ராகி பவுடர் - 2 ஸ்பூன்
சோயா பால் - அரை டம்ளர்
சர்க்கரை - 2 ஸ்பூன்


 

ஒருமைக்ரோவேவ் பௌலில் ஒருடம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு 4ஸ்பூன் ஓட்ஸும், 2 ஸ்பூன் ராகி பவுடரும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
முதலில் 600 பவரில் 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வெளியில் எடுக்கவும்.
பிறகு சோயாபால் சேர்த்து 600பவரில் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டுஇறக்கவும்.
2ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி சூடாக பரிமாறவும்.


ஓட்ஸும், ராகியும் மிகவும் சத்தான காலை உணவாகும். வயதானவர்கள்,டயட்
கண்ட்ரோலில் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தக்கஞ்சி. ஷுகர்பேஷண்ட்
காரர்கள் சர்க்கரை சேர்க்காமல் இந்தக்கஞ்சியை சாப்பிட்டு, கூடவே ஒருகப்
பப்பாளி பழமும் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோமு மேடம்,

நல்ல ஐடியா ராகியுடன் ஓட்ஸ்..சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என்னோட எல்லாகுறிப்புக்கும் முத ஆளா வந்து பின்னூட்டம் கொடுக்குரீங்க.
சந்தோஷமா இருக்கு. நல்ல, சத்தான குறிப்புகளாக கொடுக்கணும் என்றே நான்
முதல்ல வீட்டில் செய்துபாத்துட்டு, பிறகுதான் எழுதி அனுப்புவேன். இந்த கஞ்சி
எல்லாருக்குமே நல்ல ஒரு காலை உணவாகும்.

ஓட்ஸ் கஞ்சி செய்யும் போது மதியம் செய்த ரசமோ (அ) லேசான சாம்பாரோ நீருடன் கலந்து செய்தால் மிகனன்றாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள் சகோதரிகளே

Life is a game,play it.Sri Annai and Aurobindo are there for us to guide

idhuvum kadandhu pogum.