tதக்காளிக்காய் கூட்டு.

தேதி: November 2, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளிக்காய் - கால் கிலோ
பயத்தம்பருப்பு - 200 கிராம்
துருவிய தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒருசிறிய துண்டு
மஞ்சத்தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒருஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 2 ஸ்பூன்
கடுகு - ஒருடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒருஸ்பூன்


 

தக்காளிக்காயை நன்கு கழுவி சின்னத்துண்டுகளாக கட் செய்யவும்.
பயத்தம்பருப்பையும் நன்கு கழுவி, பருப்பு, தக்காளியை ஒருப்ரெஷர் பேனில்போட்டுஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூளையும் சேர்த்து 3 விசில்கள் வரை வேக விடவும்.
தாளிக்கும் கடாயில் எண்ணை ஊற்றி கடுகுபோடவும்,பொரிந்ததும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும்,சிவந்ததும் இஞ்சி,பச்சைமிளகாய் தேங்காய்ப்பூ சேர்த்து சிவக்க வறுக்கவும்.
தாளித்தவற்றை வெந்த காயில் கொட்டி கலந்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.


சப்பாத்தி, சாம்பார் சாதமுடன் தொட்டுக்கொள்வதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோமு மேடம்,

அதென்ன T தக்காளிக்காய் கூட்டு?
நானும் இதே போலே தான் செய்வேன் தேங்காய் மட்டும் தவிர்த்து வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முதல்ல இந்தமேடத்த கட் பண்ரீங்களா? பைமிஸ்டேக்t வந்துடுத்து. வருகைக்கு நன்றி.