கொழுக்கட்டை

தேதி: November 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (8 votes)

திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்களின் கொழுக்கட்டை(கிராமத்து முறை) செய்முறையை பார்த்து திருமதி. ஹர்ஷா அவர்கள் செய்து காட்டியுள்ளார்.

 

பச்சரிசி மாவு - 2 கப்
வேர்க்கடலை - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்


 

தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.
பச்சரிசி மாவை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியில் பிசறிய ஈர மாவை பரப்பி மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் ஒன்று, இரண்டாக பொடிக்கவும். இத்துடன் பொடி செய்த வெல்லம் சேர்த்து இன்னும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பூரணம் தயார். மேல் மாவுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் சிறிது வெல்லம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கரைந்ததும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். மீதியுள்ள மாவில் வெறும் உப்பு, சுடு நீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
இரு மாவையும் சிறிய உருண்டைகளாக்கி கையால் சப்பாத்தி போல் தட்டி, அதன் நடுவில் வேர்க்கடலை, வெல்லம் பூரணத்தை வைத்து சோமாஸி மூடுவது போல் மூடி ஓரத்தை அழுத்தி ஒட்டவும். இதை இட்லி பாத்திரத்தில் மீண்டும் வைத்து 10 நிமிடம் (அல்லது நன்றாக வேகும் வரை) வைத்து எடுக்கவும்.
சுவையான இருவகை கொழுக்கட்டைகள் தயார். பொதுவாக கொழுக்கட்டையின் மேல் மாவில் இனிப்பு இருக்காது. மாவில், வெல்லம் சேர்த்து பிசைவதால்,(வழக்கமான கொழுக்கட்டையை விட)மேல் மாவும் இனிப்பாக, ருசியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னபா பாதி குறிப்புதான் வந்துள்ளது

ஏமாறாதே|ஏமாற்றாதே

hi.. really its very easy to make... thanks for uploaded this receipe...

இந்தக்கொழுக்கட்டை செய்முறை சிறிது வித்யாசமா இருக்கு. பாக்கவும் நல்லா
இருக்கு. செய்துபாத்துட்டு சொல்ரேன்மா.

எனக்கு வேர்கடலை, கொழுக்கட்டை இரண்டுமே ரொம்ப பிடிக்கும். வேர்கடலை’ல பூரணம் செஞ்ச கொழுக்கட்டைனா உடனே செஞ்சர வேண்டியதுதான். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

எனது விளக்கப்பட குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.குறிப்பின் உரிமையாளர் திருமதி.வனிதாவுக்கும் என் நன்றிகள்.

பிரியதர்ஷினி,
என்னப்பா சொல்றீங்க?மொத்தக் குறிப்பும் இவ்வளவு தான்.

கனிசிவா,
செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

கோமு,ஜெயலக்ஷ்மி,
எங்க அம்மா வேர்க்கடலையும்,வெல்லமும் சேர்த்து தான் பூரணம் செய்வாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால்,வனிதாவின் குறிப்புபடி,மேல் மாவில் வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை ரொம்ப நல்லா வந்தது.நீங்களும் கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுகளுக்கு ரொம்ப நன்றி.

அன்பு, நல்ல குறிப்பு. பிரியதர்ஷினி கேட்டப்போ நானும் பார்த்தேன், 2வது படத்தோடு குறிப்பு நின்றுவிட்டது. அதான் அவங்க கேட்டிருக்காங்க.

அன்புடன்
பவித்ரா

பவி,
அப்படியா? நான் பார்த்த போது,எல்லா படங்களும் இருந்தன.சொன்னதற்கு நன்றி.

ப்ரியதர்ஷினி, சாரி பா.

ஹர்ஷா... கொழுக்கட்டை முகப்பில் பார்க்க அழகா இருக்கே, யாருடைய குறிப்புன்னு பார்க்க வந்தேன்... அட நம்ம ஹர்ஷா'னு பார்த்துட்டே இருக்கேன், நீங்க என் குறிப்புன்னு சொல்லிருக்கீங்க!!! உண்மையில் இந்த தீபாவளிக்கு இது தான் இனிப்பான விஷயம் :D . என் அம்மா சொல்லி தந்த குறிப்பை செய்து அனுப்பி எனக்கு அளவில்லாத சந்ஷோஷத்தை தந்துட்டீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஹர்ஷா. :) ரொம்ப அழகா செய்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா, வனியோட குறிப்பை அழகா தெளிவான படங்களோட தந்திருக்கீங்க. சமையல்லா ஆ'ன்னா, ஆவன்னா தெரியாதவங்க கூட நல்லா பண்ணலாம். அந்த அளவுக்கு குறிப்புகள் மிக எளிமை. எங்க வீட்லயும் அம்மா இந்த கொழுக்கட்டை தான் பண்ணுவாங்கப்பா. ஆனா புழுங்கல் அரிசில பண்ணுவாங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை அள்ளி விடுங்க :)வனிக்கும் என் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எளிமையான பலகாரம். அதான் உடனே செய்தாச்சு! சூப்பரா இருந்தது ஹர்ஷா!

நன்றி வனிக்கா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனிதா,
வழக்கமான கொழுக்கட்டையை விட,உங்க குறிப்பு படி செய்த கொழுக்கட்டை ரொம்ப நல்லா இருந்தது.உங்க குறிப்புக்கும்,பதிவுக்கும் நன்றி.

கல்ப்ஸ்,
இங்கு எனக்கு பச்சரிசி மாவு தான் கிடைக்கும்.இது செய்வதும் சுலபம்.எங்க அம்மாவும் புழுங்கலரிசியில் தான் செய்வாங்க.உங்க பதிவுக்கு நன்றி.

ஆமி,
உடனே,உடனே செய்து பார்த்து பதிவு போடுவதற்கு ரொம்ப நன்றி.

அன்பரசி உங்க கொழுக்கட்டைக்கு இங்கே கிடைக்கும் பச்சரிசி மாவைத்தான் பயன்படுத்தியிருகீங்களா? அதனால தான் அவிக்கிறீங்களா? நான் இந்த மாவை பயன்படுத்தி செய்தால் சரியாவே வரல... ஆனால் நான் அவிக்காம செய்துட்டேன். இது என்ன மாவுன்னு கொஞ்சம் சொன்னா நல்லாயிருக்கும்.

உமா,
என்னங்க? ,கொழுக்கட்டை அன்பரசி' பட்ட பெயர் மாதிரி இருக்கு. ;-))) பாவம்,பிள்ளைத்தாச்சி பொண்ணுனு சும்மா விடுறேன். ;-)))

நான் இங்கு கிடைக்கும் பச்சரிசி மாவு தாங்க யூஸ் பண்ணேன்.அதனால் தான் அவித்து செய்து இருக்கேன்.
புழுங்கலரிசி என்றால் அவிக்க தேவையில்லை.ஆனால் இங்கு நமக்கு பச்சரிசி மாவு தான் கிடைக்கிறது.

அவித்து செய்து பாருங்க. நல்லா வரும்.

அன்பரசி இங்கே எத்தனையோ கொழுக்கட்டை ரெசிப்பி இருக்கு. நான் உங்களுக்குதான் மெசேஜ் கொடுக்குறேன்னு தெரிய தான் அப்படி எழுதினேன், கோச்சுக்காதீங்க... பதிலுக்கு நன்றி.

உமா,
கோவம் எல்லாம் இல்லைங்க.சும்மாதான் கிண்டல் பண்ணேன்.
பட்ட பெயர் வெச்சாலும் கூட கோச்சுக்க மாட்டேன்.

இந்த விநாயகர் சதுர்த்திக்கு நான் செய்த கொழுக்கட்டை உங்களுடையது தான்.. முதன்முதலில் செய்ததும் கூட ..நன்றாக இருந்தது..

நன்றி செய்து காட்டியதற்கு..வனிக்கும் நன்றி ...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,
கொழுக்கட்டை செய்துட்டீங்களா?உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.வினாயகர் சதுர்த்திக்கு நானும் இதே கொழுக்கட்டை தான் செய்தேன்.சேம் பின்ச். ;-)