சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

லஞ்சமா???... இனிமேல், "எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லாதீங்க...
********************************************************************************
நாளுக்கு நாள் சமூகத்தில் எத்தனை இடங்களில் நாம் ஊழலை கண் கூடாக காண்கிறோம்... ஆனால், இதெல்லாம் திருத்த முடியாது என்று நாம் கண்டுகொள்ளாமல் தான் இருப்போம்... இனிமேல், அப்படி இருக்க தேவை இல்லை...

நீங்கள் ஏதாவது வகையில் சமூகத்தில் ஊழலை எதிர்கொண்டால், அதை பற்றி புகார் தெரிவிக்க ஒரு புதிய இணைய தல முகவரி வந்துள்ளது...

Website : http://cvc.nic.in/
Complaint policy: http://cvc.nic.in/comp_policy.pdf
Lodge Complaint here : http://cvc.nic.in/lodgecomp.htm

இந்த வசதியை 10% பயன் படுதினால் கோட நம் நாடு 20% முன்னேற்றம் அடையும்...

வாருங்கள், ஊழலில்லாத,வளமான இந்தியாவை உருவாக்குவோம்...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

அறுசுவை தோழிகளுக்கு எல்லாம் நல்லா சேதி ஒன்னு வெச்சு இருக்கேனே..... எல்லாருக்கும் புடுச்ச விஷியம். என்ன தெரிமா??? தங்கத்த பத்தினது.
இந்தியா - தங்கம் ஆன்லைன் trading ஸ்டாப் பண்ண போறாங்க. டிசம்பர் முதல் வாரத்துல இருந்து நிறுத்த போறான்கலாமா.... அப்படி நிறுத்தினா, தங்கம் விலை பயங்கரமா சரிய போகுது. கிராம் 1100 வந்துடும் நு மத்திய அரசு சொல்லி இருக்கு. ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஜாலி தான???

கீழ இருக்கற லிங்க் பாருங்க..... எல்லாரும் ஆத்துக்காரர் கிட்ட நிறைய சேத்தி வெச்சுக்கோங்க......
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123937

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி சுகந்தி!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கிங்ஸ் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், நவ. 10: தஞ்சாவூரை அடுத்த புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் நவம்பர் 13, 14-ம் தேதிகளில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 2010 ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.சி.ஏ., பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரியின் முதல்வர் வி. ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னையைச் சேர்ந்த மாநில தொழில்பயிற்சி வாரியத்துடன், கிங்ஸ் கல்லூரி இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த சி.டி.எஸ். மென்பொருள் நிறுவனம், தனது வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான பொறியியல் வல்லுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. சுமார் 3,000 பட்டதாரிகள் வரை தேர்வு செய்யப்படலாம்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி விவரங்களை, பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு கிடைக்கப்பெற்ற பதிவு எண்ணுடன் நவம்பர் 13-ம் தேதி காலை 8 மணிக்கு கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் நடக்கும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 14-ம் தேதி தொழில்வளம், மனிதவள நேர்காணல் நடத்தப்படும். இதிலும் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு அன்றே பணி ஆணை வழங்கப்படும்.

இந்தப் பணியில் சேருபவர்களுக்கு ஓர் ஆண்டு ஊதியமாக ரூ. 3 லட்சம் வரை கிடைக்கும். பட்டதாரிகள் 10, பிளஸ் 2 தேர்வில் 60 சதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பு வரை கல்வியில் இடைநின்றல் இருக்கக் கூடாது.

தஞ்சாவூர் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதியும், கல்லூரியில் தங்க இடவசதியும் இலவசமாக செய்துதரப்படும் என்றார் ஆறுமுகம். கல்லூரி வளாக அலுவலர் டி.ஆர்.எஸ். முத்துகுமரன், வேலைவாய்ப்பு பயிற்சியாளர் எஸ். ஜான் இம்மானுவேல், கல்லூரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி 11.11.2010

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தேன் : இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு

01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

21 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள்.

24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

26 ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

27 நூற்றிருபது (120 ) கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

29 சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.

33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.

34 குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.

35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும்.

ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும்.

மேலும், உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி, தேனில் இவ்வளவு நன்மைகள் உண்டா? ஆச்சரியமாக உள்ளது. மிகவும் பயனுள்ள குறிப்பு. மிக்க நன்றி!

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மத்திய அரசின் உதவி தொகை

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்).2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும். பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தைஅனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்வது உண்டு. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் யோகா எப்படிப்பா இப்படி கலக்கிருங்க? ரொம்ப உபயோகமுள்ள குறிப்புகள் கொடுக்கிருங்க. ரொம்ப நன்றி.

வாழு இல்லை வாழவிடு

சுமிசெழியன், நான் அறிந்து அனுபவித்த வற்றை அறுசுவையில் பகிர்ந்து கொள்கின்றேன் அவ்வளவுதான்.

பாராட்டுக்கு நன்றி சுமி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்